ஒளவையாரின் இலக்கிய ஞானம்

30/08/2020 Sujatha Kameswaran 0

ஒளவையார் இறைவனின் அருளால், இலக்கிய ஞானமும், உலக அறிவில் மேம்பட்ட எண்ணமும் உடையவராய் திகழ்ந்தார். உலக வாழ்க்கை முறைப்பற்றியும், அதிலிருந்து மேம்பட்ட நிலையை அடைவதற்கான வழிகளையும் தம் இலக்கிய ஞானத்தின் துணைக்கொண்டு அனைவருக்கும் தெளிவுபடுத்தினார். அவற்றுள் ஒரு பகுதி: அரியது: அரிது அரிது மானிடர் ஆதல் அரிது;மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடுபேடு நீங்கிப் பிறத்தல் அரிது.பேடு நீங்கிப் பிறந்த காலையும்ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது;ஞானமும் கல்வியும் நயந்த காலையும்தானமும் […]

உடற்பயிற்சி & உள்ளப்பயிற்சி – 2

25/07/2019 Sujatha Kameswaran 0

நமது முன்னோர்கள், நேர மேலாண்மை மற்றும் உடல் மற்றும் உள்ளம் சார்ந்த விஷயங்களை கையாள்வதில் பெரும் வல்லுனர்கள். அப்பொழுதெல்லாம் ஒவ்வொரு பிரிவினருக்கான செயல்களும் மிகச்சிறந்த முறையிலேயே நடந்துவந்தன. விவசாயிகள் காலத்தை கருத்தில் கொண்டு விவசாயப்பயிர்களை, காலம் மற்றும் தட்பவெப்பத்திற்கு ஏற்றார்போல் விளைவித்தனர். மேலும் அவர்களுக்கான உடற்பயிற்சி விவசாயத்தொழிலை செய்வதன் மூலமே நடந்து முடிந்தது. ஏர் பிடித்து உழுதல், நிலத்திற்கு நீர் பாய்ச்சுதல் என இயற்கையோடு ஒன்றிய பல வேலைகளின் மூலம் […]

கொன்றை வேந்தன்

28/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 68. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர். தீயவை என ஆன்றோர், பெரியோர் கூரிய அனைத்தையும் விலக்கிவிட வேண்டும். 69. போனகம் என்பது தான் உழந்து உண்டல். தனது சொந்த உழைப்பால் பெற்ற ஊதியத்தில் உண்ணும் உணவே சிறந்த உணவாகும்.

கொன்றை வேந்தன்

11/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 34. சையொத்திருந்தால் ஐயம் இட்டுண். மற்றவர்க்கு உதவும் அளவில் பொருள் இருந்தால், இல்லாதவர்க்கு இயன்றவரை, தான தர்மம் செய்துவிட்டு, உண்ணவேண்டும். 35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர். நல்ல மனம் உடையவர், இறுதியில் நற்கதியே அடைவர்.

கொன்றை வேந்தன்

26/04/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 4. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர். கஞ்சத்தனத்துடனும், பிறருக்குத் தரக்கூடாது என்கிற எண்ணத்துடனும் சேர்த்து வைக்கும் செல்வமானது திருடர்களால் அபகரிக்கப்படும். 5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு. குறைந்த அளவு உணவு உண்பதே பெண்களுக்கு அழகைத்தரும்.

திருக்குறள்

14/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 12. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. (1-2-2) Thuppaarkkuth thuppaaya thuppaakkith thuppaarkkuth thuppaaya thoovum mazhai. உண்பவர்களுக்கு நல்ல உணவுப் பொருள்களை, மழைதான் விளைவித்துத் தருகிறது. அதே மழை, தானும் ஓர் உணவுப் பொருளாகவும் குடிநீர் வடிவில் அமைகிறது. It is rain which produces pure food-grains for us. The very same rain serves us […]