திருப்பாவை – பாசுரம் 17

01/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும் எம்பெருமான்! நந்தகோ பாலா! எழுந்திராய்; கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே! எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்; அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்; செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா! உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்   விளக்கம்: எங்களுடைய தலைவனாய் இருக்கிற நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே! கொடித் தோரணம் கட்டப்பட்ட வாசல் காவலனே! ஆயர்குல சிறுமியரான […]

கொன்றை வேந்தன்

08/06/2016 Sujatha Kameswaran 2

கொன்றை வேந்தன் 90. ஒத்த இடத்து நித்திரை செய். மேடு பள்ளம் ஏதும் இல்லாத சமதள இடத்தில் உறங்கவேண்டும். 91. ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம். அறம் கூறும் நூல்களைப் படித்தறியாதவர்களிடம் நல்ல சிந்தனை, ஒழுக்கமான செயல்கள் இருக்காது.

கொன்றை வேந்தன்

24/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண். பால் சேர்ந்த நல்ல உணவாக இருப்பினும், பசி தோன்றிய பின்னரே உண்ணவேண்டும். அதனை உண்ணும் நேரம் அறிந்தே உண்ணவேண்டும். 61. பிறன்மனை புகாமை அறமெனத் தகும். பிறர்மனைவி மீது ஆசைக்கொள்ளாமலும், பிறர் குடித்தனத்தைக் கெடுக்காமல் இருத்தலும் சிறந்த அறமாகும்.

திருக்குறள்

12/05/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 40. செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி (1-4-10) ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே ஆகும். செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே. Seyarpaala thorum arane oruvarku uyarpaala thorum pazhi That is virtue which each ought to do, and that is vice which each should shun

திருக்குறள்

11/05/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 39. அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம் புறத்த புகழும் இல (1-4-9) அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை. Araththaan varuvadhe inpam mar rellaam puraththa pukazhum ila Only that pleasure which flows from domestic virtue is pleasure; all else is not pleasure, and it […]

திருக்குறள்

10/05/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 38. வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல்(1-4-8) ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும். Veezhnaal padaa-amai nandraatrin aqdhoruvan vaazhnaal vazhiyataikkum kal If one allows no day to pass without some good being done, his conduct […]

திருக்குறள்

09/05/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 37. அறத்தா றிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோ டூர்ந்தான் இடை(1-4-7) பல்லக்கை சுமப்பவர் மற்றும், அதன்மேலமர்ந்துசெல்லுபவரிடம் அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டாம். Araththaa rithuvena venda sivikai poruththaano tuoorndhaan idai The fruit of virtue need not be described in books; it may be inferred from seeing the bearer of a palanquin and the […]

திருக்குறள்

08/05/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 36. அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை (1-4-6) இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல், உடனுக்குடன் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும். Andrarivaam ennaadhu aranjeyka matradhu pondrungaal pondraath thunai Defer not virtue to another day; receive her now; and at the dying hour […]

திருக்குறள்

07/05/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 35. அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்ற தறம் (1-4-5) பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைத் தவிர்த்து வாழ்வதே அறமாகும். Azhukkaa ravaaveguli innaachchol naangum izhukkaa iyandra dharam. That conduct is virtue which is free from these four things, viz, malice, desire, anger and bitter speech

திருக்குறள்

06/05/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 34. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற(1-4-4) ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். இது ஒருவகை அறம் ஆகும். மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை. Manaththukkan maasilan aadhal anaitharan aagula neera pira Let him who does virtuous deeds be of spotless mind; to that extent is virtue; all […]

1 2