திருவெம்பாவை – பாசுரம் 18

02/01/2021 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் – 18 அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல் கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத் தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாம் அகல பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளி சேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடி பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய். – மாணிக்கவாசகர் விளக்கம் : தோழியே! திரு அண்ணாமலை அண்ணலது […]

கொன்றை வேந்தன்

31/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். முன்னர் பிறர்க்கு ஒருவர் துன்பம் செய்தால் பின்னொரு நாள் அத்துன்பம் அவருக்கே வரும். 75. மூத்தோர் சொல் வார்த்தை அமிழ்தம். பெரியோர்கள் கூறும் அறிவுரை வார்த்தைகள் நம்மை அழிவிலிருந்து காப்பாற்றும் அமுதம் போன்றதாகும்.

கொன்றை வேந்தன்

29/05/2016 Sujatha Kameswaran 2

கொன்றை வேந்தன் 70. மருந்தேயாயினும் விருந்தோடு உண். இறப்பில்லா வாழ்வு தரும் அமுதமே ஆனாலும், விருந்தினர்க்கும் பகிர்ந்து அளித்து உண்ணவேண்டும். 71. மாரி அல்லது காரியம் இல்லை. மழை தக்கக் காலத்தில் பெய்யாவிடில் அதனைச் சார்ந்த வேலைகள் ஏதும் நடைப்பெறாது.