எண்ணங்கள் வண்ணங்கள்

14/04/2016 Sujatha Kameswaran 2

எண்ணங்கள் வண்ணங்கள் லட்சியமும், அறிவும்: குறிக்கோளில்லாதவர் துடுப்பில்லாத படகைபோல அலைப்பாயவேண்டியிருக்கும். வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் என்னென்னவற்றை செய்யவேண்டும் என்ற எண்ணமும், அடைய வேண்டிய இலக்குபற்றிய சிந்தனையும் அவசியம். திட்டமிட்ட இலக்கை எட்டியவுடன் ஏற்படும் மனமகிழ்ச்சி மிகவும் இனிமையானது. குறிக்கோளை ஏற்படுத்திக்கொள்ள, அதை அடைய, அதனைப்பற்றியும் அதனைச்சார்ந்த செய்திகளையும் அறிந்திருத்தல் மிக அவசியம். எதனை அடைய உள்ளுகிறோமோ அதனைப்பற்றிய சுய அறிவும், நமது அனுபவ அறிவு, பிறரது அனுபவப்பகிர்வு மற்றும் பிறகாரணிகளால் […]

எண்ணங்கள் வண்ணங்கள்

13/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணம் செயலாகின்றது; செயல் பழக்கம் ஆகின்றது; பழக்கம் நடத்தை ஆகின்றது; நடத்தை வாழ்க்கைமுறை ஆகின்றது.                                          *எண்ணமே வாழ்வாகின்றது* எண்ணங்கள் வண்ணங்கள் வாய்ப்புகளும் வசதிகளும்: ஒவ்வொரு பெரிய செயலிலும்  நம்மை நாம் ஈடுபடுத்திக்கொள்வதற்கான வாய்ப்புகள் பல உள்ளன. அவற்றை கண்டுணர்ந்து அவற்றைப்பயன்படுத்திக் கொள்வது நமது […]

எண்ணங்கள் வண்ணங்கள்

12/04/2016 Sujatha Kameswaran 0

எல்லா உயிரும் இன்பமெய்துக, எல்லா உடலும் நோய்தீர்க, எல்லா உணர்வும் ஒன்றாதலுணர்க. -மகாகவி பாரதியார் எண்ணங்கள் வண்ணங்கள் ஆரோக்கியமும் செயல்பாடும்: மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும் உடல் ஆரோக்கியமும் பெரும்பங்கு வகிக்கிறது. மனசோர்வு எவ்வாறு நம் எண்ணங்களை பாதிக்குமோ, அதேபோல் உடல் சோர்வும் பாதிக்கும். வெற்றிக்கான சிறப்பம்சம் மனம் உடல் இரண்டையும் சார்ந்துள்ளது. உடல் சார்ந்த உற்சாகம் ஒரு பகுதியையும், மனம் சார்ந்த உற்சாகம் பெரும் பகுதியையும் வகித்தால், செயலில் வெற்றி நிச்சயம். […]

எண்ணங்கள் வண்ணங்கள்

11/04/2016 Sujatha Kameswaran 0

மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும். – மகாகவி பாரதியார் எண்ணங்கள் வண்ணங்கள் உறவுகளின் ஒத்துழைப்பு: நம்மைப்பற்றி அறிந்தவர்களும், நமது நலனில் பெரிதும் அக்கறையுள்ளவர்களுமானவர்கள் நமது உறவினர்கள். நம் முன்னேற்றத்தில் அவர்களது பங்கும் உண்டு. நமது செயல்பாடுகளுக்கான அங்கீகாரம் முதலில் நமது வீடுகளிலிருந்தே பெறவேண்டியனவாக உள்ளன. வீட்டு மனிதர்களுடனான உறவுமுறை மட்டுமல்லாமல், வெளிமனிதர்களான, நாம் பணிபுரியும் இடம், அப்பணியின் காரணமாக சந்திக்கும் நபர்கள் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள் என அனைவருக்கும் […]

எண்ணங்கள் வண்ணங்கள்

10/04/2016 Sujatha Kameswaran 0

காரியத்தில் உறுதி வேண்டும் – மகாகவி பாரதியார் எண்ணங்கள் வண்ணங்கள் மன நிம்மதி:           அனைவருக்கும் மிக முக்கியமான ஒன்று மனநிம்மதியாகும். மனத்தில் செயலைப்பற்றிய அலைகள் இருந்தாலும், ஆழ்கடலின் அமைதிபோல ஒருவித அமைதியை, நிம்மதியை மனம் கொண்டிருக்கவேண்டும். மனமானது நமது உள்ளார்ந்த வழிகாட்டி. இதன் வழிகாட்டுதலுக்கு மாறாகச் செயல்படும்போது மனம் தனது அமைதியை இழக்கிறது.           நமது செயல்களின் வழியாக […]

எண்ணங்கள் வண்ணங்கள்

09/04/2016 Sujatha Kameswaran 0

கனவு மெய்படவேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும். -மகாகவி பாரதியார் எண்ணங்கள் வண்ணங்கள் வேண்டுவன வேண்டாமை: வாழ்வை முன்னோக்கி சிறப்பாய், சலிப்பில்லாமல் வாழ, லட்சியம்(லட்சியங்கள்) மிக அவசியம். இலக்கை நிர்ணயித்தப்பின்னரே வாழ்வு சுவாரசியம் அடையும். நாம் செய்யவேண்டுவன எவை, செய்யக்கூடாதவை எவை, என்பதனைத் தெளிவாக உணர்ந்துகொண்டு, அதற்கேற்றாற்போல் இலக்கை நோக்கி செயல்பட்டால் எளிதில் வெற்றிபெறலாம். லட்சியங்கள் குறித்த எண்ணங்கள் தெளிவானப் படக்காட்சிகளாக நம்மை வழிநடத்தும். மாண்புமிகு அப்துல் கலாம் அவர்கள் உரைத்தாற்போல், இலக்கைக்குறித்து […]

எண்ணங்கள் வண்ணங்கள்

07/04/2016 Sujatha Kameswaran 0

நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைபடவேண்டும். -மகாகவி பாரதியார் எண்ணங்கள் வண்ணங்கள் எதிர்பார்ப்பு : நம்பிக்கையைப்போல எதிர்ப்பார்பும் நம் எண்ணத்தைப்போல் அமையும். நேர்மைமறை எண்ணத்துடன் எதிர்பார்பது நன்மை செய்யும். எடுத்தக்காரியத்தில் வெற்றிபெறவேண்டும் என்பதும், எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதும், தான் விரும்பியதை அடையவேண்டும் என்பதும் அனைவரின் எதிர்பார்பாக உள்ளது. இவ்வெதிர்பார்ப்பை, நடைமுறையில் சில விதங்களில் பிரிக்கலாம். பெற்றோர்களின் எதிர்பார்ப்பு, நம்மிடம் நாம் கொண்டுள்ள எதிர்பார்ப்பு, ஆசிரியர் மற்றும் அலுவலக […]

எண்ணங்கள் வண்ணங்கள்

06/04/2016 Sujatha Kameswaran 0

உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும். -மகாகவி பாரதியார் எண்ணங்கள் வண்ணங்கள் நம்பிக்கை: உலக மக்கள் நிம்மதியுடன் வாழ ஆதாரம் நம்பிக்கை. நம்மேல் நாம் வைக்கும் நம்பிக்கை, நம்மை உயர்த்தும். பிறர்மேல் நாம் வைக்கும் நம்பிகை நம் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் மேம்படுத்தும், பிறர் நம் மேல் வைக்கும் நம்பிக்கை நம்மை மேலும் முன்னேற்றுவதுடன், அவர்களுடனான உறவுமுறையை மேலும் சிறப்பானதாக மாற்றும். பொதுவாக நாம் எதைப்பார்க்கிறோமோ, அதை நம்புவதில்லை. எதை நம்புகிறோமோ, […]

எண்ணங்கள் வண்ணங்கள்

05/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவை எண்ணவேண்டும்,                                                                         திண்ணிய நெஞ்சம் வேண்டும், தெளிந்தநல் அறிவு வேண்டும். -மகாகவி பாரதியார் எண்ணங்கள் […]

1 2 3 4