திருப்பாவை – பாசுரம் 21

05/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்; ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்; மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண் ஆற்றாதுவந்து உன்னடிபணியுமாபோலே, போற்றியாம், வந்தோம், புகழ்ந்தேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 20

04/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்; செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்; செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்; உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்! – ஆண்டாள் முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக தெய்வமே! நீ எழுவாயாக! […]

திருப்பாவை – பாசுரம் 19

03/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக் கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்; மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண், எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால், தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்   குத்து விளக்கெரிய, யானைத் தந்தத்தால் ஆன கட்டில் மேல் விரிக்கப்பட்ட மிருதுவான பஞ்சுமெத்தையில், விரிந்த கொத்தாக பூ […]

திருப்பாவை – பாசுரம் 18

02/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன், நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்! கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்; வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப் பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்; பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட, செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய், மகிழ்ந்தேலோர் எம்பாவாய்! – ஆண்டாள் விளக்கம்: மதநீர் சிந்தும் யானைகளை உடையவனும், போரில் பின்வாங்காத தோள்வலிமை உடையவனுமான நந்தகோபனின் மருமகளே! நப்பின்னை பிராட்டியே! வாசனை […]

திருப்பாவை – பாசுரம் 17

01/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும் எம்பெருமான்! நந்தகோ பாலா! எழுந்திராய்; கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே! எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்; அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்; செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா! உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்   விளக்கம்: எங்களுடைய தலைவனாய் இருக்கிற நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே! கொடித் தோரணம் கட்டப்பட்ட வாசல் காவலனே! ஆயர்குல சிறுமியரான […]

திருப்பாவை – பாசுரம் 16

31/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில்காப்பானே! கொடித்தோன்றும் தோரண வாயில்காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்; ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்; தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்; வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா! நீ நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 15

30/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ? சில்லென்றழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்; ‘வல்லை, உன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதும்!’ ‘வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக!’ ‘ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை?’ ‘எல்லோரும் போந்தாரோ?’ ‘போந்தார், போந்து எண்ணிக்கொள்’ வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க வல்லானை, மாயனைப் பாடேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருவெம்பாவை பாசுரம் – 14

29/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் 14 காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக் கோதை குழலாட வண்டின் குழாம் ஆட சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன் பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.                           […]

திருப்பாவை – பாசுரம் 14

29/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின காண்; செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர், தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்; எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய்! எழுந்திராய், நாணாதாய்! நாவுடையாய்! சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 13

28/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை புள்ளின்வாய் கீண்டானை, பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய், பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்; வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று; புள்ளும் சிலம்பினகாண்; போதரிக் கண்ணினாய்! குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே, பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால் கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

1 2 3 4 5