திருப்பாவை – பாசுரம் 14

29/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின காண்; செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர், தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்; எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய்! எழுந்திராய், நாணாதாய்! நாவுடையாய்! சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 13

28/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை புள்ளின்வாய் கீண்டானை, பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய், பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்; வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று; புள்ளும் சிலம்பினகாண்; போதரிக் கண்ணினாய்! குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே, பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால் கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 12

27/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கிநினைத்து முலை வழியே நின்று பால் சோரநனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்பனித் தலை வீழ நின்வாசற் கடைபற்றிச்சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்றமனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்!  – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 11

26/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்துசெற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம்பொற்கொடியே புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின் முற்றம்புகுந்து முகில் வண்ணன் பேர் பாடசிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீஎற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 10

25/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை – பாசுரம் 10 நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்? நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகரணனும் தோற்றம் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ? ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே! தேற்றமாய் வந்து திறவேலார் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 9

24/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை – பாசுரம் 9 தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியதூபங்கமழத் துயிலணைமேல் கண்வளரும்மாமான் மகளே! மணிக்கதவம் தாழ்திறவாய்;மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?மாமாயன், மாதவன், வைகுந்தன், என்றென்றுநாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 8

23/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை – பாசுரம் 8 கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடுமேய்வாய் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்கூவுவான் வந்து நின்றோம், கோதுலகமுடையபாவாய்! எழுந்திராய், பாடிப் பறைகொண்டுமாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டியதேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்ஆவாவென்றாராய்ந் தருளேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 7

22/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை – பாசுரம் 7 கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்துபேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்துவாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்ஓசைபடுத்தத் தயிரரவம் கேட்டிலையோ?நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்திகேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?தேசமுடையாய்! திறவேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை – பாசுரம் 6

21/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை – பாசுரம் 6 புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டுகள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சிவெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினைஉள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருப்பாவை

20/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை – பாசுரம் 5 மாயனை மன்னுவடமதுரை மைந்தனைத்தூய பெருநீர் யமுனைத் துறைவனைஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்தாயைக் குடல்விளக்கம் செய்ததாமோதரனைத்தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுதுவாயினாற்பாடி மனத்தினால் சிந்திக்கப்போயபிழையும் புகுதருவான் நின்றனவும்தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

1 2 3 4