கொன்றை வேந்தன்

07/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 26. சந்ததிக்கு அழகு வந்திசெய்யாமை. பரம்பரை (வம்சம்) தழைத்து சிறக்க வேண்டுமானால், மனைவியைப் பிரியாது கூடி வாழவேண்டும். 27. சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு. தாம் பெற்ற பிள்ளையை சான்றோன் என்று பிறர் அழைப்பதே, அப்பெற்றோருக்குச் சிறப்பாகும்.

கொன்றை வேந்தன்

05/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 22. கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி. நம் கையிலிருக்கும் செல்வத்தைவிட, உண்மையான செல்வம், நாம் கற்றக்கல்வியே ஆகும். 23. கொற்றவன் அறிதல் உற்றிடத்துதவி. துன்பத்தால் யார் வருந்துகின்றனர் என அறிந்து உதவி செய்தலே, அதிகாரத்தில் இருப்பவரின் முதல் கடமையாகும்.

கொன்றை வேந்தன்

04/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 20. கெடுவது செய்யின் விடுவது கருமம். ஒரு செயலானது தீயவிளைவைத்தருவதாக இருந்தால், அச்செயலைச் செய்யாமல் விடுவது நல்லது. 21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை. வறுமை நிலை ஏற்பட்டாலும், நமது மன உறுதியே, நம்மிடம் செல்வத்தைக் கொண்டுசேர்க்கும்.

கொன்றை வேந்தன்

03/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 18. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. மற்றவரது குற்றத்தைக் கருதி அவர்களை ஒதுக்கினால், பிறகு நமக்கென யாரும் இருக்கமாட்டார். எனவே, அவர்களது குற்றத்தை நம்மால் இயன்ற அளவில் சரிசெய்யவேண்டும். 19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல். மிகவும் கூரான ஆயுதம் கையில் இருந்தாலும், அகந்தையுடன் வீரம் பேசக்கூடாது.

கொன்றை வேந்தன்

02/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 16. கிட்டாதாயின் வெட்டென மற. நாம் விரும்பியது கிடைக்கவில்லையெனில் அதனை உடனடியாக மறந்துவிடவேண்டும். 17. கீழோர் ஆயினும் தாழ உரை. நம்மைவிட எளியோர்கள் எனினும், அவர்களிடம் மரியாதையோடு பேச வேண்டும்.

கொன்றை வேந்தன்

01/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 14. கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை. கற்பு என்பது, நடத்தைத் தவறாமையாகும். 15. காவல்தானே பாவையர்க்கு அழகு. நல்லொழுக்கம் தவறாமல், தன்னைக் காத்துக்கொள்வது பெண்களுக்கு சிறப்பானதாகும்.

கொன்றை வேந்தன்

30/04/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 12. ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு. மற்றவர் வளர்ச்சியைப் பார்த்துப் பொறாமையால் பேசுவது, நாம் பெற்றுள்ள நல்லனவற்றை அழித்து விடும். 13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு. சிக்கனமாக வாழ்க்கை நடத்தி, செல்வத்தை சேர்க்கவேண்டும்.

கொன்றை வேந்தன்

28/04/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 8. ஏவா மக்கள் மூவா மருந்து. பெற்றோர் குறிப்பறிந்து செயல்படும் மக்கள் பிணிதீர்க்கும் மருந்தைப் போன்றவர்கள். 9. ஐயம் புகினும் செய்வன செய். பிச்சை எடுத்து வாழவேண்டிய நிலை ஏற்படினும், நற்செயல்களைச் செய்யவேண்டும்.

கொன்றை வேந்தன்

27/04/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும். ஊர்மக்கள் அனைவருடனும் விரோதம் கொண்டால், வம்சத்தின் அனைவரும் கெட்டொழிய நேரும். 7. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். எண்களை அடிப்படையாகக்கொண்ட கணிதமும், எழுத்துக்களை அடிப்படையாகக்கொண்ட அறநூல்களும் கண்களுக்கிணையான முக்கியத்துவம் வாய்ந்தவை.

கொன்றை வேந்தன்

26/04/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 4. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர். கஞ்சத்தனத்துடனும், பிறருக்குத் தரக்கூடாது என்கிற எண்ணத்துடனும் சேர்த்து வைக்கும் செல்வமானது திருடர்களால் அபகரிக்கப்படும். 5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு. குறைந்த அளவு உணவு உண்பதே பெண்களுக்கு அழகைத்தரும்.

1 2 3 4 5