திருக்குறள்
திருக்குறள் குறள் – 19. தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின்(1-2-9) Thaanam thavamirandum thangaa viyanulakam vaanam vazhangaa dhenin மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும். If rain fall not, penance and alms-deeds will not dwell within this spacious world
எண்ணங்கள் வண்ணங்கள்
எண்ணங்கள் வண்ணங்கள் பயமும் அச்சமும்: வாழ்க்கையில் பயம் இருக்கலாம், ஆனால் பயமே வாழ்வாகக்கூடாது. ஒவ்வொன்றிற்கும் பயப்படவோ, அச்சமடையவோ ஆரம்பித்தால், எதனையும் சரியாகச் செய்யமுடியாது. தொடங்கிய நிலையிலேயே அது முடிவடைந்துவிடும். செயலைத் தொடங்கும்போதோ அல்லது இடையிலோ ஏற்படும் தயக்கம் வேறு, அச்சமயம் தோன்றும் பயம் என்பது வேறு. தயக்கம் என்பது செயலின் போக்குக்கேற்ப தானே நீங்கிவிடும். ஆனால் செயல் குறித்த பயம், செயலிற்கான உற்சாகத்தைக்குறைத்துவிடும். நாம்தான் இவற்றை முயற்சியெடுத்து நீக்கிக்கொள்ளவேண்டும். தவிர்க்கமுடியாமல் […]
எண்ணங்கள் வண்ணங்கள்
எண்ணங்கள் வண்ணங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனம்: விமர்சனம் என்பது செயலை கருத்தில்கொள்ளாமல், செய்தவரை கருத்தில் கொள்வதாய் இருந்தால், அது சரியான விமர்சனமாய் அமையாது. நமக்கு பிடித்தவராய் இருந்தால் அதற்கேற்பவும், பிடிக்காதவராயினின் அதற்கேற்றாற்போலவும், நமது விமர்சனங்கள் அமையும். எனவேதான் செயல்களை சீர்தூக்கி விமர்சனம் செய்யவேண்டும். ஆக்கப்பூர்வமான விமர்சனத்திற்கு, முதலில் அவரது செயல்கள் குறித்து சரியாக அறிந்துகொண்டு, நோக்கத்தை தெரிந்துகொண்டு, பின்பே அவற்றைக்குறித்து பேசவேண்டும். ஏதேனும் தவறு இருப்பின், ‘இது தவறு’, ‘இவ்வாறு செய்யாதே’, […]
திருக்குறள்
திருக்குறள் குறள் – 18. சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு (1-2-8) Sirappotu posanai sellaadhu vaanam varakkumel vaanorkkum eendu மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது. If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to the […]
எண்ணங்கள் வண்ணங்கள்
எண்ணங்கள் வண்ணங்கள் வெற்றியின் தடங்கல்: செயல்களில் வெற்றிகொள்ள, மேற்கொள்ளப்படும் உக்திகள், பின்பற்றப்படும் நடைமுறைகள் போன்றவைகள் மட்டுமல்லாமல், செயல்கள் குறித்த விமர்சனங்கள் மிகவும் முக்கியமானவை. மோசமான விமர்சனகள், செயல்களை தடைபடுத்தி, வெற்றிக்குப் பெருங்தடங்கலாய் அமையும். எதிர்பாராதவர்களிடமிருந்து கிடைக்கும் சாதாரண விமர்சனமும் ஒருவித உற்சாகத்தை அளிக்கும். அதேசமயம் நாம் எதிர்பார்ப்பவரிடமிருந்து வராத சாதாரண விமர்சனமும் நம்மை சலிப்படைய செய்யலாம். ஒவ்வொரு விமர்சனமும் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும். இக்காரணத்தினாலேயேதான், தற்பொழுது உலகில் பெரும்பாலானோர் Facebook, […]
திருக்குறள்
திருக்குறள் குறள் – 17. நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின் (1-2-7) Netungadalum thanneermai kundrum thatindhezhili thaannalgaa dhaaki vitin மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும். Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has drawn (its waters) […]
திருக்குறள்
திருக்குறள் குறள் – 16. விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்ப தரிது (1-2-6) Visumpin thuliveezhin allaalmar traange pasumpul thalaikaanba dharidhu வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது If no drop falls from the clouds, not even the green blade of grass will be seen