காலச்சக்கரம்

13/04/2024 Sujatha Kameswaran 0

காலச்சக்கரம் காலமாற்றத்தைக் குறிக்கும் சொல் காலச்சக்கரம். இது காலம்-நேரம் மாறுவதைக் குறிப்பிடுவதோடு, அச்சுழற்சியியுடன் மானிடர்களும் எங்ஙனம் மாறுகின்றனர் என்பதை குறிக்கின்றது. இருபது வயதில் இதுதான் வேண்டும் என்று தோன்றும் முப்பது வயதில் இவைகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும் நாற்பது வயதில் இதுவே போதும் என்று தோன்றும் ஐம்பது வயதில் இவைகள் இல்லையென்றாலும் பரவாயில்லை எனத் தோன்றும் அறுபது வயதில் எது இல்லையென்றாலும் பரவாயில்லை என்று தோன்றும் எழுபது […]

மௌனம்

10/02/2020 Sujatha Kameswaran 0

மௌனம் என்பது மிகவும் மகத்துவமானது. வார்த்தைகளோ செய்கைகளோ ஏதும் இல்லாமல் அர்த்தத்தையும், கம்பீரத்தையும், பயத்தையும், எதிர்ப்பையும், துக்கத்தையும், ஆனந்தத்தையும், அவமானத்தையும் வெளிப்படுத்த சிறந்ததொரு உபாயம். பல நேரங்களில் வார்த்தைகள் விவாதத்தை வளர்க்கும். ஆனால் மௌனமோ அனைவரையும்…. அனைத்தையும்… யோசிக்கவைக்கும். இலக்கை அடைவதற்காக மனதையும் செயல்களையும் ஒருமுகப்படுத்தும் போது மௌனம் சக்தி தீவிரமாகப்போராடும் போது மௌனம் வலிமை. கற்ற வித்தையைக் கையாளும்போது மௌனம் பெருமிதம். எதிர்ப்பாராத தருணத்தில் நமக்குரிய பாராட்டையும் பரிசையும் […]

விடுகதையா இந்த வாழ்க்கை? – வாலிபப்பருவம்

15/11/2016 Sujatha Kameswaran 0

வாலிபப்பருவம் – விடலைப்பருவம் வாழ்க்கைச்சக்கரத்தில் வாலிபப்பருவம் என்பது பல புதிர்களுடன் கூடிய இனிய பருவம். அடுத்தடுத்தக்கட்டத்தில் பல வித்தியாசமான கோணங்களில் பல கேள்விகளையும் அதற்குத் தகுந்த பதில்களையும், சில நேரங்களில் எதிர்மறை பதில்களையும் கொண்டு அமையும் விடுகதைகள் பல கொண்ட வாழ்க்கையில், பெரும் விடுகதையாகவும் சவாலாகவும் அமையும் பருவம் இந்த வாலிபப்பருவம். இப்பருவத்தினருக்கு, தனக்குள் நடக்கும் மாற்றங்கள் சரிவரபுரிவதில்லை. இக்குழப்பத்தின் உச்சகட்டமே உள தடுமாற்றம் அதனால் ஏற்படும் செயல் தடுமாற்றங்கள் […]

விடுகதையா இந்த வாழ்க்கை? இளம்பருவம்

20/10/2016 Sujatha Kameswaran 0

இளம் பருவம் வாழ்க்கைச் சக்கரத்தின் ஒவ்வொரு நிலையும், அழகானது, இனிமையானது மற்றும் வியப்பானது. இவற்றில் இளம்பருவம் என்பது மிகவும் வியப்பானது, சிலநேரங்களில் அபாயகரமானதும், மொத்தத்தில் அவ்விளம்பிராயத்தினருக்கும் அவர்களைச் சுற்றியுள்ளோருக்கும் பெரும் சவாலான பருவம் அது. இப்பருவத்தில் உள்ளோரை அவரைச்சார்ந்தோர் புரிந்துகொண்டு, அனுசரித்து, அரவணைத்துச் சென்றால் இந்நிலையை இனிதே கடக்கலாம். மற்றவர்கள் நம்மைப்புரிந்து கொள்ளவில்லை என்ற எண்ணம் இளம்பருவத்தினரிடம் ஓங்கி நிற்கிறது. இவ்வயதினரின் கருத்துக்களை முதலில் கேட்டு பின்பு அதில் உள்ள […]

விடுகதையா இந்த வாழ்க்கை? – குழந்தைகள்

10/10/2016 Sujatha Kameswaran 0

குழந்தைகள்-(தொடர்ச்சி) குழந்தைகள் காணும் உலகம், மிகவும் அதிசயமானது. அவர்கள் ஒவ்வொன்றையும் கண்டு பிரமிக்கின்றனர். அவ்வுணர்வை உடனே வெளிப்படுத்தத் துடிக்கின்றனர். அத்தகு உணர்வுகளினூடே பல்வேறு கேள்விகளை முன்வைக்கின்றனர். அவற்றிற்கெல்லாம் தக்க பதிலாக உண்மையான பதிலாக, எவ்வித சமாளிப்பும் இல்லாத பதிலாக பெற்றோரின்/பெரியோரின் பதில் இருக்கவேண்டும். அக்கேள்விகளை தொணதொணப்பென்று நாம் நினைத்தால், பிற்காலத்தில் நம் கேள்விகளை அவர்கள்  முணுமுணுப்பென்பர். ஏன், எதற்கு என்கிற கேள்விகள் பல கொண்டுள்ளவர்களே குழந்தைகள். முற்காலத்தில் தவழும் பிராயத்தில் […]

விடுகதையா இந்த வாழ்க்கை?

01/09/2016 Sujatha Kameswaran 0

விடுகதையா இந்த வாழ்க்கை? குழந்தைகள் குழந்தைகளின் உலகம் மிக அருமையானது. தன்னைச்சுற்றி நடக்கும் சூஷ்மங்களை அறிந்துகொள்ள முடியாத பருவம். நம்பிக்கையையும், அன்பையும் ஆணிவேராய் கொண்ட பருவம். குரோதம் இல்லை, பகைமை இல்லை, வெறுப்பில்லை, கோபமும் இல்லை. தன்னால் இயன்றவற்றிற்கெல்லாம் சிரிப்பதும், இயலாமையின்போது அழுவதும், இயல்பாய் கொண்டுள்ளன குழந்தைகள். தொடர்ந்து முயலும் முயற்சி, கடுஞ்சொற்பேசியவரிடமும், நிரந்தர கோபம் கொள்ளாமை. தான் அண்டியவரை நம்புவது, தன்னை சேர்ந்தவரை மகிழ்விப்பது என எவ்வித பொருட்பலனையும் […]

விடுகதையா இந்த வாழ்க்கை?

11/08/2016 Sujatha Kameswaran 2

விடுகதையா இந்த வாழ்க்கை?!   ஏன்? எதற்கு? என்கிற கேள்விகளைக்கொண்டும், ஆனால் அவற்றிற்கு பதில்கள் சரியானபடி இல்லாமல் அமைந்திருக்கின்றது இவ்வாழ்க்கை. விடைக்காணமுடியா விசித்திரமான புதிர், இந்த வாழ்க்கை. மற்றவருக்கு நடக்கும் ஒவ்வொரு விஷயங்களுக்கும், அடுத்தடுத்து என்ன செய்யவேண்டும் என்றும், நடந்து முடிந்த நிகழ்ச்சியானால் அதனை எவ்வாறு சிறப்பாகச் செய்திருக்காலாமென்றும் நமக்கு சரியாகத் தெரிகின்றது. ஆனால், அவை நமக்கு என வரும்போது, தக்க சமயத்தில்,  நம் புத்தி, உணர்ச்சி இவைகள் தக்கவாறு […]