திருக்குறள்

03/05/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் பால் : அறத்துப்பால் Section : Virtue அதிகாரம்: அறன் வலியுறுத்தல் – 4 Division : Assertion of the Strength of Virtue – 4 இயல் : பாயிரவியல் Chapter : Prologue – 1 குறள் – 31. சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு (1-4-1) அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை […]

திருக்குறள்

02/05/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 30. அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான் (1-3-10) எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர். Andhanar enpor aravormar trevvuyirkkum sendhanmai poontozhuka laan The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are clothed in kindness

திருக்குறள்

01/05/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 29. குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்தல் அரிது நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து அவரைக் காத்தல் அரிதாகும். Kunamennum kundreri nindraar veguli kanameyumg kaaththal aridhu The anger of those who have ascended the mountain of goodness, though it continue but for a […]

திருக்குறள்

30/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 28. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்(1-3-8) பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும். Niraimozhi maandhar perumai nilaththu maraimozhi kaatti vidum The hidden words of the men whose words are full of effect, will shew their greatness to the world

திருக்குறள்

29/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 27. சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின் வகைதெரிவான் கட்டே உலகு (1-3-7) சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம். Suvaioli ooruosai naatramen draindhin vakaidherivaan katte ulaku The world is within the knowledge of him who knows the properties of taste, sight, touch, […]

திருக்குறள்

28/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 26. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார் (1-3-6) Seyarkariya Seyvaar Periyar Siriyar Seyarkariya Seykalaa Thaar செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர். The great will do those things which is difficult to be done; but the mean cannot do them

திருக்குறள்

27/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 25. ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி (1-3-5) ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவார். Aindhaviththaan aatral akalvisumpu laarkomaan indhirane saalung kari Indra, the king of the inhabitants of the spacious heaven, is himself, a sufficient proof of the strength of him […]

திருக்குறள்

26/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 24. உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து (1-3-4) Uranennum thottiyaan oraindhum kaappaan varanennum vaippirkor viththu அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன் He who guides his five senses by the hook of wisdom will be a seed in the world of […]

திருக்குறள்

25/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 23. இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற் றுலகு (1-3-3) Irumai vakaidherin dheentuaram poondaar perumai pirangir trulagu பிறப்பு, வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது. The greatness of those who have discovered the properties of both states of being, and renounced the world, […]

திருக்குறள்

24/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 22. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று (1-3-2) Thurandhaar perumai thunaikkoorin vaiyaththu irandhaarai ennikkon datru பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது. To describe the measure of the greatness of those who have forsaken the two-fold desires, is like counting the dead

1 2 3 4 5