பஜகோவிந்தம் – 5

24/03/2020 Sujatha Kameswaran 0

5. சுற்றம் சுயநலத்துடன் கூடியது யாவத் வித்தோபார்ஜந ஸக்த: தாவந் நிஜ பரிவாரோ ரக்த: || பச்சாத் ஜீவதி ஜர்ஜர தேஹே வார்த்தாம் கோ$பி ந ப்ருச்சதி கேஹே || யாவத் – எதுவரை வித்த உபார்ஜந ஸக்த: – பணம் சம்பாதிப்பதில் ஈடுபட்டிருக்கிறானோ தாவத் – அதுவரை நிஜபரிவார: – தன்னுடைய சுற்றமானது ரக்த: – அன்பு கொண்டுருக்கும் பச்சாத் – பிறகு ஜர்ஜரதேஹே – தளர்ந்த உடலுடன் […]

பஜகோவிந்தம் – 4

20/03/2020 Sujatha Kameswaran 0

4. வாழ்க்கையே நிலையில்லாதது நளிநீ தளகத ஜலம் அதிதரளம் தத்வத் ஜீவிதம் அதிசய சபலம் || வித்தி வ்யாத்யபிமாந க்ரஸ்நம் லோகம் சோகஹதம் ச ஸமஸ்தம் || பதவுரை:- நளிநீ தளகத ஜலம் – தாமரை இலைமீதுள்ள தண்ணீர் அதிதரளம் – மிகவும் சஞ்சலமானது தத்வத் – அதேபோல் ஜீவிதம் – வாழ்க்கையானது அதிசய சபலம் – மிகவும் சஞ்சலமானது வித்தி – அறிவாயாக வ்யாத்யபிமாந (வ்யாதி அபிமாந) – […]

பஜகோவிந்தம் – 3

17/03/2020 Sujatha Kameswaran 0

3. பெண்ணாசையை விடு   நாரீ ஸ்தநபர நாபீ தேசம் த்ருஷ்ட்வா மா கா மோஹாவேசம் || ஏதந் மாம்ஸ வஸாதி விகாரம் மநஸி விசிந்தய வாரம் வாரம் ||   பதவுரை:- நாரீ ஸ்தநபர நாபீதேசம்         – பெண்ணின் ஸ்தனங்கள், நாபிப்பகுதி என்பவைகளை த்ருஷ்ட்வா                                       – பார்த்து மா கா:                      […]

பஜகோவிந்தம் – 2

15/03/2020 Sujatha Kameswaran 0

2. பணத்தாசையை ஒழி! மூட ஜஹீஹி தநாகம த்ருஷ்ணாம் குரு ஸத்புத்திம் மனஸி வித்ருஷ்ணாம் | யல்லபஸே நிஜகர்மோபாத்தம் வித்தம் தேந விநோதய சித்தம் || பதவுரை:   ஹே மூட!                                – ஓ மூடனே! ஜஹீஹி                  […]

பஜகோவிந்தம் – 1

13/03/2020 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 1 அத்வைத மார்க்கத்தை நிலைநிறுத்தி, பற்பல தேவதா ஸ்தோத்திரங்களை இயற்றியருளி, பக்தி மார்க்கத்தில் அனைவரையும் ஈடுபட வைத்த ஆதிசங்கரரால் இயற்றப்பட்ட பல்வேறு க்ரந்தங்களில் பஜகோவிந்தமும் ஒன்று. கோவிந்தனை பஜனை செய்வது என்கிற நேரடியான பொருளைக்கொண்டிருந்தாலும், எவ்வாறு என்னென்ன செய்து, எம்முறைப்படி கோவிந்தனை பஜிக்கவேண்டும் என்பதும், அதனால் ஆவதென்ன என்பதனையும் தெளிவாக உரைக்கிறார். ஸ்லோக வடிவில் இருந்தாலும் இசையுடன் பாட ஏதுவாய் அமைந்துள்ளது.  இந்த பஜகோவிந்தம் என்னும் ஸ்தோத்திரத்தின் […]

நான்கு வித தர்மங்கள்

06/11/2019 Sujatha Kameswaran 0

தசரதன் ஒரு ஆண்மகவு வேண்டும் என்றே வேண்டினார். எனினும் அவருக்கு நான்கு மகன்கள். ஏனெனில், நான்கு விதமான தர்மங்களை நிலைநிறுத்தத்தான். நான்கு விதமான தர்மங்களாவன, 1. சாமான்ய தர்மம்: பிள்ளைகள் பெற்றோரிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும்? சீடன் குருவிடம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்? கணவன் மனைவியிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும்? என்கிற சாமான்ய தர்மங்களைத் தானே பின்பற்றி எடுத்துக்காட்ட வந்து வாழ்ந்துகாட்டியவர் ராமன். 2. சேஷ தர்மம்: சாமானிய தர்மங்களை ஒழுங்காகச் செய்துகொண்டுவந்தால் கடைசியில் […]

கோயிலின் அமைப்பு

29/07/2019 Sujatha Kameswaran 0

ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு அமைப்பு இருக்கும். பெரும்பாலும் புராதன கோயில்களின் அமைப்பு ஒரே விதத்திலேயே அமையும். ஆகம விதிகளின்படி கோயிலை நிர்மாணித்திருப்பர். கோயிலுக்கு அதிலுள்ள பல விஷயங்கள் அழகு சேர்த்தாலும், கோயிலின் மண்டபங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. ஒவ்வொரு மண்டபமும் ஒவ்வொரு நோக்கத்திற்காக அமைக்கப்பட்டிருக்கும். அவற்றைப்பற்றி சுருக்கமாகக் காண்போம்; 1. அர்த்த மண்டபம் 2. மஹா மண்டபம் 3. நிருத்த மண்டபம் 4. பதினாறுகால் மண்டபம் 5. நூற்றுக்கால் (அ) ஆயிரங்கால் […]

பிரஹ்ம முஹூர்த்தம்

18/03/2019 Sujatha Kameswaran 0

பிரஹ்ம முஹூர்த்தம் பற்றிய விபரங்கள் மூல நூல்களில் இருந்ததற்கான ஆதாரங்கள். பதினெண் புராணங்களில் ஒன்றான சிவபுராணத்தில், ருத்ரசம்ஹிதையின் சிருஷ்டி காண்டம் 11 மற்றும் 13-ஆவது அத்யாயங்களில், பிரம்ம முஹூர்த்தத்தின் சிறப்பைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது. ஸ்ரீமத் பாகவதம் 3:20:46-இல் பிரம்மமுஹூர்த்தத்தைப் பற்றி எடுத்துரைத்திருக்கிறது. ரிக்வேதத்திலும் பிரம்ம முஹூர்த்தம் பற்றிய விளக்கங்கள் சொல்லப்பட்டுள்ளன. வேதத்தில் சொல்லப்பட்டுள்ள ஸ்லோகங்களுக்கு வியாக்யானம், அதாவது உரையும் விளக்கமும் சொல்லும் நூலுக்கு பிராஹ்மனம் என்று பெயர். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை […]

பரதநாட்டியம்

03/04/2018 Sujatha Kameswaran 0

இசைத்துறை சார்ந்த கலைகளில் ஓர் அற்புதமான கலை நமது பரதநாட்டியம். மற்ற அனைத்து இசை சார்ந்த கலைகளிலும், சில உறுப்புகளின் ஒத்துழைப்பு இருந்தாலே போதுமானது. ஆனால் பரதநாட்டியத்தில் வெளிஉறுப்புகள் மட்டுமல்லாது, எண்ணமும் ஒரே சித்தமாய் ஒரே பாதையில் அமையவேண்டும். பாட்டின் தன்மைக்கேற்ப முகம் சிறந்த உணர்ச்சிகளையும், கைகள் மற்றும் கால்கள் பாடலுக்கேற்ற அபிநயத்தையும், காட்டவேண்டுமானால் எண்ணமும் அப்பாட்டிற்கேற்பவே பயணிக்கவேண்டும். இவ்வாறு அனைத்தையும் ஒருங்கிணைத்து செய்தாலே இக்கலை பரிபூரணமாகும். சரியாக சொல்வதானால் […]

கண் தானம்

08/02/2017 Sujatha Kameswaran 0

கண் தானம் உடலுறுப்புகளின் தானம் பற்றி எண்ணற்ற செய்திகள் பரவிவருகின்றன. மேலும் அதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடந்தவண்ணம் உள்ளன. இவை எல்லாம் மனிதாபிமானத்திற்காகவும், சில புண்ணியத்திற்காகவும், சில பணத்திற்காகவும், மேலும் சில மண்ணிற்கோ, நெருப்பிற்கோ போவது சக உயிரினத்திற்கு பயன்பட்டால் நல்லதுதான் என தத்துவ ரீதியாகவோ செய்யப்படுகின்றன. ஆனால் பக்தியினால் தூய தொண்டுள்ளத்தால் முதன்முதலில் உறுப்பு தானம் பக்தி இலக்கிய காலத்தில்  நடைபெற்றது. உடலுறுப்பு தானம் அதிலும் […]

1 9 10 11 12