கொன்றை வேந்தன்

17/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 46. தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது. மற்றவரிடம் கெஞ்சிக்கேட்டு(பிச்சையெடுத்து) உண்பதைவிட, தானே உழுது அல்லது உழைத்து உண்ணலாம். 47. தோழனோடும் ஏழைமை பேசேல். நெருங்கிய நண்பரிடம்கூட உனது வறுமை நிலையை வெளிப்படுத்திப் புலம்பக்கூடாது.

கொன்றை வேந்தன்

16/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும். மேற்கொண்டு பொருளைச் சேர்ப்பதற்கு முயற்சி செய்யாமல், தன்னிடம் இருக்கும் செல்வத்தை செலவு செய்வது, அழிவைத்தரும். 45. தையும் மாசியும் வையகத்து உறங்கு. பனிபொழியும் மாதங்களான தை மற்றும் மாசியில், வைக்கோலால் வேயப்பட்ட வீட்டில் உறங்கவேண்டும்.

கொன்றை வேந்தன்

15/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 42. தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும். கணவனைப் பற்றி அவதூறு பேசும் பெண்ணை, அக்குடும்பத்தின் எமன் என்று எனலாம். 43. தெய்வம் சீறின் கைதவம் மாளும். தெய்வத்தின் கோபத்திற்கு ஆளானால், முன்னர் தவம் செய்து பெற்ற புண்ணியம் அனைத்தும் அழிந்துபோகும்.

கொன்றை வேந்தன்

14/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 40. தீராக் கோபம் போராய் முடியும். நீங்காத பெருங்கோபம், இறுதியில் பெரும் போர் ஏற்படச்செய்யும். 41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு. கணவனின் துன்பம் கண்டு துடிக்காத பெண், அடிவயிற்றில் கட்டிய நெருப்பைப் போன்றவளாவாள்.

கொன்றை வேந்தன்

13/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 38. தாயிற்சிறந்ததொரு கோயிலும் இல்லை. பெற்ற தாயைவிட சிறந்த வணங்கத்தக்க கோயில் இல்லை.   39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு. கடல் தாண்டி வெளிநாடு சென்றாவது, பொருள் ஈட்டவேண்டும்.  

திருக்குறள்

12/05/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 40. செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி (1-4-10) ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே ஆகும். செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே. Seyarpaala thorum arane oruvarku uyarpaala thorum pazhi That is virtue which each ought to do, and that is vice which each should shun

கொன்றை வேந்தன்

12/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர். சோம்பல் குணம் கொண்டவர், வறுமையடைந்து துன்புறுவர். 37. தந்தைசொல் மிக்க மந்திரமில்லை. தந்தை கூறும் அறிவுரையைவிட, மேலான நல்லது ஒன்றுமில்லை.    

திருக்குறள்

11/05/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 39. அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம் புறத்த புகழும் இல (1-4-9) அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை. Araththaan varuvadhe inpam mar rellaam puraththa pukazhum ila Only that pleasure which flows from domestic virtue is pleasure; all else is not pleasure, and it […]

கொன்றை வேந்தன்

11/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 34. சையொத்திருந்தால் ஐயம் இட்டுண். மற்றவர்க்கு உதவும் அளவில் பொருள் இருந்தால், இல்லாதவர்க்கு இயன்றவரை, தான தர்மம் செய்துவிட்டு, உண்ணவேண்டும். 35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர். நல்ல மனம் உடையவர், இறுதியில் நற்கதியே அடைவர்.

கொன்றை வேந்தன்

10/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 32. செய்தவம் முதிர்ந்தால் கைதவம் மாளும். தவவாழ்க்கை முதிர்ச்சியடைந்தால், துன்பங்கள் விலகிவிடும். 33. சேமம் புகினும் யாமத்து உறங்கு. காவல் பணி புரிபவராயினும், நடு இரவில் சிறிது நேரமாவது உறங்க வேண்டும்.

1 18 19 20 21 22 31