9. நாம் யார் என்பதை கவனிக்கவேண்டும்
கா தே காந்தா கஸ்தே புத்ர:
ஸம்ஸாரோऽயம் அதீவ விசித்ர: |
கஸ்ய த்வம் வா குத ஆயாத:
தத்வம் சிந்தய ததிதம் ப்ராந்த ||
பதவுரை :
கா – யார்?
தே – உன்னுடைய
காந்தா – மனைவி
கஸ்ய தே – யாரைச் சேர்ந்தவன்(ள்)
புத்ர: – மகன்
ஸம்ஸார: – சம்சாரம் என்பது
அயம் – இந்த
அதீவ – மிகவும்
விசித்ர: – விசித்ரமானது
கஸ்ய தே – யாரைச் சேர்ந்தவன் (ள்)
த்வம்வா – நீதான்
குத: – எங்கிருந்து
ஆயாத: – வந்தாய்
தத்வம் – உண்மையை
சிந்தய – ஆலோசிபபாயாக
தத் இதம் – அப்படிப்பட்ட இந்த
ப்ராந்த – குழப்பம் மிகுந்தவனே
கருத்து:
மனக்குழப்பம் மிகுந்தவரே, உனக்கு உறவினர் (மனைவி (அ) கணவன்) யார்? மக்கள் யார்? இந்த உலக வாழ்க்கையே விசித்ரமானது. நீ யாருக்குச் சொந்தம்? எங்கிருந்து வந்தாய்? இந்த உண்மையைப் பற்றிச் சிந்தனை செய்யவேண்டும். நீ இந்த உடலல்ல என்பதைப் பற்றியும், எதனால் பிறவி எடுத்தாய் என்பதைப் பற்றியும் சிந்தனை செய்வாயாக என நம் வாழ்க்கையைப்பற்றிச் சிந்திக்க வைக்கிறார் ஆதிசங்கரர்.
பஜிப்பது தொடரும்…
Leave a Reply