நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைபடவேண்டும்.
-மகாகவி பாரதியார்
எண்ணங்கள் வண்ணங்கள்
எதிர்பார்ப்பு :
நம்பிக்கையைப்போல எதிர்ப்பார்பும் நம் எண்ணத்தைப்போல் அமையும். நேர்மைமறை எண்ணத்துடன் எதிர்பார்பது நன்மை செய்யும்.
எடுத்தக்காரியத்தில் வெற்றிபெறவேண்டும் என்பதும், எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதும், தான் விரும்பியதை அடையவேண்டும் என்பதும் அனைவரின் எதிர்பார்பாக உள்ளது.
இவ்வெதிர்பார்ப்பை, நடைமுறையில் சில விதங்களில் பிரிக்கலாம். பெற்றோர்களின் எதிர்பார்ப்பு, நம்மிடம் நாம் கொண்டுள்ள எதிர்பார்ப்பு, ஆசிரியர் மற்றும் அலுவலக மேலதிகாரிகளின் எதிர்பார்ப்பு, வாழ்க்கைத்துணை, குழந்தைகள், சக மனிதர்களின் எதிர்பார்ப்பு என்பனப் போன்றவை.
பெற்றோரின் எதிர்பார்ப்பு, பிள்ளைகளின் நல்வாழ்வில் நிறைவடையும். நம்மிடம் நாம் கொண்டுள்ள எதிர்பார்பில் நேர்மறை எண்ணங்கள் மற்ற எதிர்பார்ப்பைவிட அதிக அளவில் காணப்படுகிறது.
ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு, மாணவ, மாணவியரின் நல்ல தேர்ச்சியில் நிறைவுபெறும். அலுவலகப் பணிகளைச் சிறப்பாக ஆற்ற மேலதிகாரியின் எதிர்பார்ப்பு, அவற்றை ஊழியர்கள் நிறைவேற்றுவதன் மூலம் நிறைவுபெறும்.
வாழ்கையை சிறந்தமுறையில் நடத்த நம் வாழ்க்கைத்துணையின் எதிர்பார்ப்பும் அவற்றை அறிந்து ஆராய்ந்து நிறைவேற்றுவதும் இனிய இல்லறத்திற்கு உதவும். நம் குழந்தைகளும் பெற்றோர் இங்ஙனம் நம்மிடம் நடந்து கொள்ளவேண்டும். நமது தேவைகளை நிறைவேற்றவேண்டும் என்கிற எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட்டால் அவர்கள் மகிழ்வர். சகமனிதர்கள் அவரவர் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள நாம் அவர்களை எதிர்பார்பதுபோல, நம்மை அவர்களும் எதிர்பார்பது இயல்பே.
எண்ணங்கள் தொடரும்….
Leave a Reply