5. சுற்றம் சுயநலத்துடன் கூடியது
யாவத் வித்தோபார்ஜந ஸக்த:
தாவந் நிஜ பரிவாரோ ரக்த: ||
பச்சாத் ஜீவதி ஜர்ஜர தேஹே
வார்த்தாம் கோ$பி ந ப்ருச்சதி கேஹே ||
யாவத் – எதுவரை
வித்த உபார்ஜந ஸக்த: – பணம் சம்பாதிப்பதில் ஈடுபட்டிருக்கிறானோ
தாவத் – அதுவரை
நிஜபரிவார: – தன்னுடைய சுற்றமானது
ரக்த: – அன்பு கொண்டுருக்கும்
பச்சாத் – பிறகு
ஜர்ஜரதேஹே – தளர்ந்த உடலுடன் கூடியவனாய்
ஜீவதி (ஸதி) – பிழைத்திருக்கும்போது
கேஹே – வீட்டில்
கோ$பி – எவனும்
வார்த்தாம் – என்ன சங்கதி என்று
ந ப்ருச்சதி – கேட்கமாட்டான்
கருத்து:
ஒருவன் பணம் சம்பாதிக்கும் வரையில்தான் மனைவி மக்கள் எல்லாரும் அவனிடம் அன்பாகப் பழகிப் பணிவிடை செய்வார்கள். அவன் கிழத்தனத்தால் உடல் தளர்ந்து இருக்கையில் பழையபடி பழகமாட்டார்கள் என்பதை உணர்ந்துகொள் என்கிறார் ஆதிசங்கரர்.
பஜிப்பது தொடரும்…..
Leave a Reply