4. வாழ்க்கையே நிலையில்லாதது
நளிநீ தளகத ஜலம் அதிதரளம்
தத்வத் ஜீவிதம் அதிசய சபலம் ||
வித்தி வ்யாத்யபிமாந க்ரஸ்நம்
லோகம் சோகஹதம் ச ஸமஸ்தம் ||
பதவுரை:-
நளிநீ தளகத ஜலம் – தாமரை இலைமீதுள்ள தண்ணீர்
அதிதரளம் – மிகவும் சஞ்சலமானது
தத்வத் – அதேபோல்
ஜீவிதம் – வாழ்க்கையானது
அதிசய சபலம் – மிகவும் சஞ்சலமானது
வித்தி – அறிவாயாக
வ்யாத்யபிமாந
(வ்யாதி அபிமாந) – நோய், கர்வம் என்பவைகளால்
க்ரஸ்நம் – விழுங்கப்பட்டதாகவும்
லோகம் ச – உலகையும்
சோகஹதம் ச – வருத்தத்தால் தாக்கப்பட்டதாகவும்
கருத்து:
தாமரை இலைமீது ஒட்டாமல் அசைந்தோடிக் கொண்டிருக்கும் நீர்போல் மனிதவாழ்க்கை நிலையற்றது. உலகில் எங்குபார்த்தாலும் நோயும் செருக்கும்தான் காணப்படுகிறது. எவனும் தான் சுகமாக இருப்பதாக நினைப்பதில்லை. எனவே, நிலையற்ற இந்த உலக வாழ்க்கைக்காக வீணாக அலையாதே என்கிறார் ஆதிசங்கரர்.
பஜிப்பது தொடரும்….
Leave a Reply