2. பணத்தாசையை ஒழி!
மூட ஜஹீஹி தநாகம த்ருஷ்ணாம்
குரு ஸத்புத்திம் மனஸி வித்ருஷ்ணாம் |
யல்லபஸே நிஜகர்மோபாத்தம்
வித்தம் தேந விநோதய சித்தம் ||
பதவுரை:
ஹே மூட! – ஓ மூடனே!
ஜஹீஹி – விட்டுவிடு
தநாகம த்ருஷ்ணாம் – பணவரவுக்கான பேராசையை
(தன ஆகம த்ருஷ்ணாம்) – (பண வரவுக்கான தாகத்தை)
குரு – செய்
ஸத்புத்திம் – நல்ல புத்தியை
மனஸி வித்ருஷ்ணாம் – மனத்தில் ஆசையற்றதான
யத் – எந்த
லபஸே – அடைகிறாயோ
நிஜ கர்ம உபாத்தம் – தன் முன்வினையால் வந்துசேர்ந்த
வித்தம் – பணத்தை
தேந – அந்த பணத்தினால்
விநோதய – சந்தோஷப்படுத்து
சித்தம் – மனத்தை
கருத்து:
ஓ மூடனே! மேலும் மேலும் பணம் வேண்டும் என்ற பேராசையை விட்டுவிடு. நீ முன்பிறவியில் செய்த தான தருமங்களுக்கேற்ப இப்பிறவியில் உனக்குச் செல்வம் வருகிறது. அப்படி தானாக வந்த செல்வத்துடன் திருப்தியடைந்திரு. பேராசையால் மனத்தை குழப்பிக்கொள்ளாதே என்கிறார் ஆதிசங்கரர்.
பஜிப்பது தொடரும்….
Leave a Reply