பஜகோவிந்தம் – 3

3. பெண்ணாசையை விடு

 

நாரீ ஸ்தநபர நாபீ தேசம்

த்ருஷ்ட்வா மா கா மோஹாவேசம் ||

ஏதந் மாம்ஸ வஸாதி விகாரம்

மநஸி விசிந்தய வாரம் வாரம் ||

 

பதவுரை:-

நாரீ ஸ்தநபர நாபீதேசம்         – பெண்ணின் ஸ்தனங்கள், நாபிப்பகுதி என்பவைகளை

த்ருஷ்ட்வா                                       – பார்த்து

மா கா:                                              – அடையாதே

மோஹாவேசம்                            – மயக்க வேகத்தை

ஏதந்                                                    – இது

மாம்ஸ வஸாதி விகாரம்        – மாமிசம், உவர்ந்த தண்ணீர் என்பவைகளின் மாற்றுருவம்

(இதி)                                                  – என்று

மநஸி                                                – மனத்தில்

விசிந்தய                                          – நினைப்பாயாக

வாரம் வாரம்                                  – அடிக்கடி

 

கருத்து:-

 

ஹே மூடனே! ஒரு பெண்ணின் ஸ்தனங்கள் மற்றும் மற்ற உடற்கூற்றைப் பார்த்து மயங்கிவிடாதே! இதெல்லாம் மாமிசத்தாலும் உவர்நீர் முதலிய அசுத்தமான பொருள்களாலும் தயாரானவை. எனவே உனக்கு அவற்றின் மீது மயக்கம் ஏற்படும்போது சற்று நிதானித்து, அவைகள், ரத்தம், சீழ், மாமிசம் போன்ற அசுத்தப்பொருட்களல்லவா என்று அடிக்கடி நினைப்பாயாகில் உனக்கு அவற்றின்மீது மோகம் ஏற்படாது.

 

பஜிப்பது தொடரும்…..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*