நான்கு வித தர்மங்கள்

தசரதன் ஒரு ஆண்மகவு வேண்டும் என்றே வேண்டினார். எனினும் அவருக்கு நான்கு மகன்கள். ஏனெனில், நான்கு விதமான தர்மங்களை நிலைநிறுத்தத்தான்.

நான்கு விதமான தர்மங்களாவன,

1. சாமான்ய தர்மம்:

பிள்ளைகள் பெற்றோரிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும்? சீடன் குருவிடம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்?
கணவன் மனைவியிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும்? என்கிற சாமான்ய தர்மங்களைத் தானே பின்பற்றி எடுத்துக்காட்ட வந்து வாழ்ந்துகாட்டியவர் ராமன்.

2. சேஷ தர்மம்:

சாமானிய தர்மங்களை ஒழுங்காகச் செய்துகொண்டுவந்தால் கடைசியில் வரும் நிலை தாச நிலை அதாவது சேஷ நிலை இதற்கான தர்மமே சேஷ தர்மம். இதற்கு உதாரணம் லக்ஷ்மணன்.

3. விசேஷ தர்மம்:

தூரத்தில் இருந்துகொண்டே எப்போதும் பகவானின் சிந்தனையாகவே இருப்பது விசேஷ தர்மமாகும்.
இது சேஷ தர்மத்தைவிட கடினமானது. இத்தகைய தர்மத்தை கடைபித்தவர் பரதன்.

4. விசேஷதர தர்மம்:

பகவானை விட அவருடைய அடியார்களுக்குத் தொண்டு செய்வதே முக்கியம் எனக் கருதுவது விசேஷதர தர்மம் ஆகும்.

தசரதனின் நான்காவது மகனாகிய சத்ருகன் பாகவத உத்தமனாகிய பரதனுக்குத் தொண்டு செய்தே உயர்ந்தார்.

ஆகவே, இத்தகைய நான்கு வித தர்மங்களை உலகுக்கு வாழ்ந்துகாட்டி உணர்த்தவே தசரதனுக்கு நான்கு மகன்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*