போஜனம் செய்ய வாருங்கள்
மீனாட்சி சுந்தரேசர் கல்யாண மண்டபத்தில்
போஜனம் செய்ய வாருங்கள்
நவசித்ரமானதோர் கல்யாண மண்டபத்தில்
போஜனம் செய்ய வாருங்கள்
வாழைமரத்துடன் வெட்டிவேர் கொழுந்து
மாவிலை தோரணம் பவள ஸ்தம்பம்
நாட்டிய கூடம், பச்ச மரகதம்
பதித்த சுவர்களும் பசும்பொன் தரையில்
பலவர்ணப் பொடியினால் பதித்த கோலத்தில்
நட்ட நடுவே குத்து விளக்கேற்றி
தூண்கள் தோறும் தூண்டா விளக்கும்
சுற்றிலும் தீபங்கள் மணிகளும் அசைய
பந்தி பந்தியாய் பாயை விரித்து
உத்தரணியுடன் ஜலபாத்திரங்களும்
தலைவாழை இலைபோட்டு
தப்பாமல் இடம் பண்ணி
போஜனம் செய்ய வாருங்கள்….
மும்மூர்த்திகளுடன் முனிவர்கள் தேவர்கள்
யஷ்ய கிங்கனர் கந்தவர்களும்
அஷ்டதிக்கு பாலர்கள் சூழ அந்தணர்களும்
முன்பந்தியிலே அணிஅணியாக
அவரவர் இட்ததில் அழகாய் இருந்தார்
அகல்யை திரௌபதி சீதை தாரை
மண்டோதரியுடன் பந்தடித்தார்போல்
பட்டுகள் கட்டி கெஜ்ஜை மெட்டிகள் கிலுகிலுங்கவே
முத்திரை மோதிரம் விரலில் கொண்டு
பசும்பொன் தூக்கில் பாயாசத்தை எடுத்து
பார்த்து பார்த்து பறிமாறவே வந்தார்
போஜனம் செய்ய வாருங்கள்…..
மாந்தயிர் பச்சடி தேங்காய் பூ கோசமல்லி
விறங்கிகாய் கிச்சடி பறங்கிகாய் பச்சடி
விதவிதமாகவே வெத்தலப்பழம்
பாங்குள கூட்டு டாங்கர் பதுக்கை
சில்சித கறியும் பலாபிஞ்சு கறியும்
பாகற்காய் கசட்டல் கத்தரிக்காய் துவட்டல்
வாழைக்காய் வறுவல் வாழைப்பூ துறுவல்
உண்போர்க்கு சுகமான செம்பா அரிசியுடன்
மொத்த பருப்பும் குத்துறுக்கு நெய்யும்
போஜனம் செய்ய வாருங்கள்…..
பொரிச்ச குழம்பு பூசணிக்காய் சாம்பார்
வெண்டைக்காய் மோர்க்கடி வெங்காய சாம்பார்
வாய்க்கு மிக ருசிக்கும் மிளகு ஜீரா ரசம்
மதுரமாய் இருக்கும் மைசூர் ரசமும்
பருப்புகள் சேர்த்த பன்னீர் ரசமும்
வேணுவோர்க்கெல்லாம் வேப்பம்பூ ரசமும்
குடிக்க மிக ருசிக்கும் கொட்டு ரசமும்
சூரிய உதயம் போல் சீறும் அப்பளம்
சுக்ல உதயம் போல் ஜவ்வரிசி கருவடாம்
அகார வடிசல் சக்கரைப் பொங்கல்
என்னென்ன சுண்டல் வகையான வடை
சுமசாலா வடை வெங்காய வடை
சொஜ்ஜி வடையுடன் நல்லெண்ணெய் வடை
தயிர் வடையுடன் பால்போளிகளும்
அனாரசம் அதிரசம் பதிர்பேளியுடன்
சேமியா வளிவாய் ஜிலேபி லட்டு
முத்து முத்தாய் இருக்கும் முந்திரிலாடு
ரம்மியமாய் இருக்கும் ரவா லாடு
பேஷாய் இருக்கும் பேசரி லாடு
குண்டுகுண்டாய் இருக்கும் குஞ்சாலாடு
பளபளவென இருக்கும் பயத்தம லாடு
மைசூர்பாகுடன் பர்பியும் சேர்த்து
போஜனம் செய்ய வாருங்கள்…
குரிகனி வர்தங்கள் பச்ச நாடாம் பழம்
தேங்கதளிப்பழம் செவ்வாழை பழம்
நேந்திர பழத்துடன் மாம்பழ தினுசுகள்
பலாபழத்துடன் வாழைப்பழமனைத்தும்
ஆடை தயிர் வெண்ணெய் தங்காமல் சேர்த்து
பகாளபாத்து
பல தினுசான சித்திரான்னங்களும்
ரஞ்சிதமான இஞ்சி ஊறுகாய்
வேப்பிலை கட்டி கொத்தமல்லி சட்னி
மிளகாய் பொடியுடன் மிளகாய் பச்சடி
பந்தியில் பறிமாறினார்
மீனாட்சி சுந்தரேசர் கல்யாணமண்டபத்தில்
பார்த்து பறிமாறினார்
Leave a Reply