நவராத்திரிகள்

நவராத்திரிகள்

அம்பாளுக்குரிய பண்டிகைகள் நிறைய உள்ளன. அவற்றுள் சிறந்த ஒன்று நவராத்திரி.ஒரு வருடத்தில் நான்கு நவராத்திரிகள் உள்ளன. அவை வசந்த நவராத்திரி, ஆஷாட நவராத்திரி, சாரதா நவராத்திரி (சரத் நவராத்திரி), மக நவராத்திரி ஆகும்.

வசந்த நவராத்திரி – சித்திரை மாதத்திலும், ஆஷாட நவராத்திரி – ஆனி-ஆடி மாதத்திலும், சாராதா நவராத்திரி – புரட்டாசி மாதத்திலும், மக நவராத்திரி – தை மாதத்திலும் கொண்டாடப்படுகின்றது.

சரத் காலத்தில் கொண்டாடப்படும் நவராத்திரியை சாரதா நவராத்திரி என்பர். நவராத்திரி என்பது ஒன்பது நாட்கள் இரவில் கொண்டாடப்படுவதாகும். எனினும் இந்த சாரதா நவராத்திரி என்பதில் ஒரு நாளினை சேர்த்து தசரா என பத்து நாள்கள் விழா கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை மைசூரிலும், வட இந்தியாவிலும் மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

சரத் காலத்தின் முக்கிய மாதமாகிய புரட்டாசி மாதத்தின் வளர்பிறையில் பிரதமை திதியில் ஆரம்பித்து ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமியுடன் சேர்த்து பத்து நாட்கள் நடைபெறும் சிறந்த விழாவாகும். இவ்விழா இரவில் அதாவது சாயங்காலம் ஆரம்பித்து இரவு வரைக் கொண்டாடப்படுவதாகும்.

இந்நாட்களில் அவரவர்க்கு இயன்றபடி, சுமங்கலிப்பெண்கள்கள், கன்னிப்பெண்கள், சிறுமிகள் ஆகியோரை அம்பாளாகக் கருதி கௌரவிப்பது, தாம்பூலம் மற்றும் அன்பளிப்பு அளிப்பர்.

துர்க்கை, லக்ஷ்மீ, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரை சக்திக்குத் தகுந்தபடி பூஜைசெய்து வழிபடுவது நவராத்திரியின் சிறப்பம்சமாகும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*