பிரஹ்ம முஹூர்த்தம் பற்றிய விபரங்கள் மூல நூல்களில் இருந்ததற்கான ஆதாரங்கள்.
பதினெண் புராணங்களில் ஒன்றான சிவபுராணத்தில், ருத்ரசம்ஹிதையின் சிருஷ்டி காண்டம் 11 மற்றும் 13-ஆவது அத்யாயங்களில், பிரம்ம முஹூர்த்தத்தின் சிறப்பைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது.
ஸ்ரீமத் பாகவதம் 3:20:46-இல் பிரம்மமுஹூர்த்தத்தைப் பற்றி எடுத்துரைத்திருக்கிறது.
ரிக்வேதத்திலும் பிரம்ம முஹூர்த்தம் பற்றிய விளக்கங்கள் சொல்லப்பட்டுள்ளன.
வேதத்தில் சொல்லப்பட்டுள்ள ஸ்லோகங்களுக்கு வியாக்யானம், அதாவது உரையும் விளக்கமும் சொல்லும் நூலுக்கு பிராஹ்மனம் என்று பெயர். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை தைத்ரீய பிராஹ்மனம் மற்றும் சதபாத பிராஹ்மனம் ஆகியவை ஆகும்.
இதில் தைத்ரீய பிராஹ்மனத்தில் மூன்றாம் பாகத்தில் 10:1:1-லும் சதபாத பிராஹ்மனத்தில் 4-2-18.25-27; 3,20; -லும் பிரம்மமுஹூர்த்தம் பற்றி சொல்லப்பட்டுள்ளது.
கர்கசம்ஹிதையில் 4:8:19; 4:18:14; 5:15:2; 8:10:7 ஆகிய ஸ்லோகங்களுல் பிரம்மமுஹூர்த்தம் பற்றியும் அதன் சிறப்பையும் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிட்டுள்ள தைத்ரீய பிராஹ்மனம் மற்றும் சதபாத பிராஹ்மனம் ஆகியவற்றில் மேற்குறிப்பிட்டுள்ள ஸ்லோகங்களில் ஒரு அஹோராத்ரத்தை அதாவது பகலும் இரவும் சேர்ந்த ஒரு நாளை முப்பது சம பாகங்களாகப் பிரிக்க வரும் இரண்டு நாழிகைக் காலம் (48 நிமிடங்கள்) ஒரு முஹூர்த்தம் எனவும் குறிப்பிட்டுள்ளதோடு அவற்றின் பெயர்களையும் சொல்லியுள்ளது.
அவையாவன:
ருத்ர முஹுர்த்தம்:
காலை 6:00 – 6:48
ஆஹி முஹுர்த்தம்:
காலை 6:48-7:36
மித்ர முஹுர்த்தம்:
காலை 7:36-8:24
பித்ரு முஹுர்த்தம்:
காலை 8:24-9:12
வசு முஹுர்த்தம்:
காலை 9:12-10:00
வராஹ முஹூர்த்தம்:
காலை 10:00-10:48
விச்வேதேவா முஹூர்த்தம்:
காலை 10:48-11:36
விதி முஹூர்த்தம்:
காலை 11:36-12:24 (மாலை)
சுதாமுகீ முஹூர்த்தம்
மாலை 12:24-1:12
பிருஹூத முஹூர்த்தம்:
மாலை 1:12-2:00
வாஹிநீ முஹூர்த்தம்:
மாலை 2:00-2:48
நக்தனகரா முஹூர்த்தம்:
மாலை 2:48-3:36
வருண முஹூர்த்தம்:
மாலை 3:36-4:24
அர்யமன் முஹூர்த்தம்:
மாலை 4:24-5:12
பக முஹூர்ஹ்த்தம்:
சாயங்காலம் 5:12-6:00
கிரீச முஹூர்த்தம்:
சாயங்காலம் 6:00-6:48
அஜபாத முஹூர்த்தம்:
சாயங்காலம் 6:48-7:36
அஹிர்புத்ன்ய முஹூர்த்தம்:
இரவு 7:36-8:24
புஷ்ய முஹூர்தம்:
இரவு 8:24-9:12
அச்வினீ முஹூர்த்தம்:
இரவு 9:12-10:00
யம முஹூர்த்தம்:
இரவு 10:00-10:48
அக்னி முஹூர்த்தம்:
இரவு 10:48-11:36
விதாத்ரு முஹூர்த்தம்:
நள்ளிரவு 11:36-12:24
கண்ட முஹூர்த்தம்:
நள்ளிரவு 12:24-1:12
அதிதி முஹூர்த்தம்:
அதிகாலை 1:12-2:00
ஜீவ/அம்ருத முஹூர்த்தம்:
அதிகாலை 2:00-2:48
விஷ்ணு முஹூர்த்தம்:
அதிகாலை 2:48-3:36
த்யுமத்கத்யுதி முஹூர்த்தம்:
அதிகாலை 3:36-4:24
பிரம்ம முஹூர்த்தம்:
அதிகாலை 4:24-5:12
சமுத்ர முஹூர்த்தம்:
அதிகாலை 5:12-6:00
மேலே சொல்லியுள்ளவற்றில் பிரம்ம முஹூர்த்தம் மற்றவற்றைக் காட்டிலும் இறைவழிபாடு மற்றும் திருமண வைபவம் மற்றும் சுபகார்யங்களுக்கு மிகவும் சிறப்பான முஹூர்த்தமாகும்.
Leave a Reply