பரதநாட்டியம்

இசைத்துறை சார்ந்த கலைகளில் ஓர் அற்புதமான கலை நமது பரதநாட்டியம். மற்ற அனைத்து இசை சார்ந்த கலைகளிலும், சில உறுப்புகளின் ஒத்துழைப்பு இருந்தாலே போதுமானது. ஆனால் பரதநாட்டியத்தில் வெளிஉறுப்புகள் மட்டுமல்லாது, எண்ணமும் ஒரே சித்தமாய் ஒரே பாதையில் அமையவேண்டும். பாட்டின் தன்மைக்கேற்ப முகம் சிறந்த உணர்ச்சிகளையும், கைகள் மற்றும் கால்கள் பாடலுக்கேற்ற அபிநயத்தையும், காட்டவேண்டுமானால் எண்ணமும் அப்பாட்டிற்கேற்பவே பயணிக்கவேண்டும். இவ்வாறு அனைத்தையும் ஒருங்கிணைத்து செய்தாலே இக்கலை பரிபூரணமாகும்.

சரியாக சொல்வதானால் இக்கலை ஒரு யோகமாகும். அதனாலேயே  ஆதியோகியான நம் சிவபெருமானே இக்கலையின் நாயகனாய் விளங்குகிறார். ஆண் பெண் என்கிற பாகுபாடில்லாமல் புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தி செயலாற்ற வைக்கும் இந்த அரிய கலையைக் கற்று, இக்கலையை மேம்படுத்தி இனிதே இசையுடன் கூடிய யோகவாழ்வை வாழ எல்லாம் வல்ல ஈசன் அருள்புரியட்டும்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*