உலகில் உள்ள அனைவருக்கும் தனித்தன்மை உண்டு. அதுவே அவர்களின் தனித்துவம். இரட்டையர்களானாலும் அவர்கள் இருவருக்கும் தனித்தனியே சில திறமைகள், செயல்பாடுகள் இருக்கும்.
தனித்துவமும் ஒரு தத்துவமே. நமது தனித்துவத்தை – தனித்திறமையை நாமே உணரமுடியும். நமது தனித்திறமையை எவ்வாறு அறிவது? மிகவும் எளிய வழியில் நம்மாலேயே உணரமுடியும். அதாவது, நமக்கு இயல்பாகவும், எளிதாகவும் எவ்வெவற்றையெல்லாம் செய்ய முடிகிறதோ அவ்வவற்றின் மூலமாக நமது தனித்திறனை நமது செயல்திறன்கள் மூலம் அறியலாம்.
ஒவ்வொரு வெற்றியாளரும் இவ்வாறு தன்னைத்தான் உணர்ந்த பின்னரே வெற்றி பெற்றுள்ளனர். இது உலகறிந்த உண்மை.
நாமும் நமது தனித்திறனை அறிந்து செயல் திறனை மேலும் வளர்த்துக்கொள்வோம்.
Leave a Reply