ஆண்மை-பெண்மை
நம் சமூகத்தில் பொதுவாக ஒரு மனிதனின் இயலாமையைப் பற்றிச் சுட்டிக்காட்ட, நீ ஒரு ஆம்பளையா? ஆம்பளைனா இந்த சவாலை ஏற்றுக்கொள் – என்பனபோன்ற வசனங்களை உபயோகிப்ப்பதுண்டு. இந்த ஆம்பளை, என்பது ஆண்களுக்கு மட்டும்தானா? பெண்களுக்கு கிடையாதா? என்கிற கேள்விகளுக்கெல்லாம் விளக்கம் இதோ…
ஆண்மை என்பது வீரத்தைக்குறிக்கும். பெண்மை என்பது மென்மையைக்குறிக்கும். ஆண்களுக்கு மட்டுமே வீரம் உரியதென பொருள் கொள்ளலாகாது. சங்க கால முறைப்படி ஆண்களே போரிடச்சென்றனர். அதனாலேயே வீரம், ஆண்மை என்பதானவை ஆண்களுக்குரியதாகக் கொள்ளப்பட்டது.
பிற்காலத்தில், ஜான்சியின் ராணி இலக்குமிபாய், வேலு நாச்சியார் போன்ற பெண்மணிகள் பலரும் போரின் மூலமாகவும் தமது வீரத்தைப் பறைச் சாற்றினர்.
போரின் போது வெளிப்படுத்தும் வீரம் மட்டும் ஆண்மை எனக் கொள்ள முடியாது. தொன்றுதொட்ட காலம் முதல் இன்றளவும், பெண்கள், தாம் சார்ந்த வீட்டிலும், வெளியிடங்களிலும் தமது வீரத்தை வெளிப்படுத்த வேண்டிய தருணங்களில் வெளிப்படுத்தி வாழ்ந்து வருகின்றனர்.அவ்வாறு வீரத்தை வெளிப்படுத்தும் நேரங்களில் அவர்தம் ஆண்மையை உணரலாம். அன்பு கொண்டு உருகும் தருணங்களிலும், ஆராற்றும் தருணங்களிலும் அவர்தம் பெண்மையை உணரலாம்.
ஒருவரை ஆளும் தன்மையும் ஆண்மை எனக்கொள்ளலாம். இவ்வாறு நோக்கின், குடும்பத்திலும், பணிபுரியும் இடத்திலும் இன்ன செய்ய, இன்ன செய்யற்க என வலியுறுத்தி வழிநடத்தும் வேளைகளிலும், ஆளும் தன்மைகொண்டு செயலாற்றுவதன் மூலமும், தனது மானத்தைக் காத்துக்கொள்ள போராடும் நேரங்களிலும் பெண்களின் ஆண்மை வெளிப்படுகிறது. தந்தையானவளும் உண்டு, தாயுமானவனும் உண்டு.
ஆண்மை கொண்ட பெண்களும் உண்டு; பெண்மை கொண்ட ஆண்களும் உண்டு. ரஜோ குணம், தமோ குணம், சத்வ குணம் என கீதையில் கண்ணன் பாகுபாடு செய்வது போல, ஆண்மை, பெண்மை என்ற இரண்டும், ஒரு நாளின் இரவு-பகல் போல மனிதரிடம் இயல்பாய் இருப்பது.
ஒன்று வெளிப்படும் நேரத்தில், மற்றது வெளிப்படாது.
பெண்களின் ஆண்மையையும், ஆண்களின் பெண்மையையும் உணர்வோம், மதிப்போம்.
I’m Ganeshprabhu,form coimbatore,,hi how are you. Very nice ur pages ,, can I talk with you
Hi Ganesh,
You can leave a comment and will sure respond if it is regarding the content.
Thanks