திருமால் பெருமை

திருமால்

திருப்பதி ஸ்ரீவேங்கடேச பெருமாளின் சிலை வடிவம் அற்புதம் நிறைந்தது.

பொதுவாகக் கருங்கற்சிலைகளில் சிற்பியின் உளிபட்ட இடம் தெரியும். செதுக்கியிருப்பதன் அடையாளம் தெரியும். ஆனால் ஏழுமலையானின் திருவுருவச்சிலையில் அவ்வாறான எவ்வித அடையாளமும் தெரியவில்லை என்பது அவருக்கு பூஜை மற்றும் அபிஷேகம் செய்யும் பூஜாரிகளின் தகவல்.

மேலும், திருவுருவச்சிலையில் நெற்றிச்சுட்டி, நாகாபரணங்கள், காதணிகள், புருவங்கள், விரல்கள் அனைத்தும் பளப்பளப்போடு திகழ்கின்றன.

வேங்கடாசலபதியின் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை கடல்மட்டத்திலிருந்து சுமார் 3000 அடி உயரத்தில் இருக்கிறது. அங்கு பெரும்பாலும் குளிர் இருக்கும். இருப்பினும் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது. வியாழக்கிழமைகளில் அபிஷேகத்திற்கென ஏழுமலையானின் ஆபரணங்களை கழற்றும் போது, அவை சூடாக இருப்பதை உணர்கின்றனர்.

வேங்கடாசலபதிக்கு சர்க்கரைப்பொங்கல், புளியோதரை, வடை, சித்ரான்னம், தோசை, ரவாகேசரி, லட்டு, பாயசம், அப்பம் என விதவிதமான நைவேத்யங்கள் ஏழுமலைக்கோவிலில் உள்ள மடப்பள்ளி எனும் சமையலறையில் சுத்தமாகத் தயாரிக்கப்படுகின்றன.

ஏழுமலையானுக்கு நைவேத்யம் செய்ய தினமும் ஒரு புதிய மண்செட்டியை வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதமே இறைவனுக்குப் படைக்கப்படுகிறது. இந்நைவேத்யம் மட்டுமே கர்பக்கிரஹம் உள்ளே அனுமதிக்கப்படும்.

ஏழுமலையானுக்கு தினமும் 21 முழ நீளமுள்ள பட்டுப்புடவையே சாத்தப்படுகிறது.

வெள்ளிக்கிழமைகளில் அர்ச்சனையின்போது வில்வ இலையைப்பயன்படுத்துகின்றனர்.

சிவராத்திரி அன்று சேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெருகையில் திருமாலின் உற்சவ மூர்த்திக்கு வைரத்தினாலான விபூதி நெற்றிப்பட்டை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெறும்.

ஏழுமலையான் வாரத்தில் 4 நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்ணுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் இருப்பதாய் கருதப்பட்டு பூஜைகள் நடைபெற்றுவருகின்றன.

அபிஷேகத்தின்போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற நம்பப்படுகிறது.

1 Trackbacks & Pingbacks

  1. தெய்வச் சிலைகள் – எண்ணும் எழுத்தும்

Leave a Reply

Your email address will not be published.


*