தெய்வச் சிலைகள்

தெய்வச்சிலைகள்-தெய்வீகச்சிலைகள்

இந்தியத் திருநாட்டின் பாரம்பரியமிக்க பல விஷயங்களில் தெய்வச் சிலைகள் பெரும் சிறப்புகள் வாய்ந்தவைகளாகத் திகழ்கின்றன.

ஒளி வடிவான இறைவனுக்கு பக்தர்கள் தங்கள் கற்பனைத் திறனாலும், தெய்வத்துடன் நெருக்கமான உணர்வு வேண்டும் என்பதாலும் உருவ அமைப்பை ஏற்படுத்தினர்.

ஆதி மனிதர்கள் முதலில் இயற்கையையே தெய்வமாக வழிபட்டனர் என்பதனை வரலாற்றின் மூலம் அறியலாம். சூரியன், அக்னி(நெருப்பு), காற்று, மலை, நீர், பூமி ஆகிய இயற்கையை வழிபட்ட மக்கள், தங்கள் வழிபாட்டின் அடுத்த நிலையாக அவற்றிற்கு வடிவம் தந்தனர்.

புராண, இதிகாசங்களின் தகவல்கள்படியும், தங்கள் எண்ணங்களுக்கேற்பவும், தெய்வக்களுக்கு கருங்கற்களில் சிலை வடித்தனர்.

கோவில்களில் உள்ள கர்பக்ருஹம் எனப்படும் தெய்வ சன்னிதியில் பெரும்பாலும் கருங்கல்லினால் ஆன சிலைகளே நிருவப்படும்.

உற்சவ மூர்த்தி என்றழைக்கப்படும், விஷேச நாட்களில் திருஉலா எடுத்துவரப்படும் தெய்வச்சிலைகள் உலோகத்தினால் வடிவமைக்கப்பட்டிருக்கும்

பெரும்பாலும், தெய்வச்சிலைகள் உலோகத்தினால் செய்யாமல், கருங்கல்லினால் செய்யப்படுவதற்குக் காரணங்கள் பல உள. அவற்றில் சிலவற்றைப்பற்றித் தெரிந்துகொள்வோம்.

கருங்கல்லில் உலோகத்தினைவிட ஆற்றல் அதிகம். எவ்வித சக்தியையும் தன்வசம் இழுத்துக்கொள்ளும் ஆற்றல் வாய்ந்தது கருங்கல். மேலும் கருங்கல்லில், பஞ்சபூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றின் தன்மைகள் அடங்கியுள்ளன. இவை உலோக சிலைகளில் வெளிப்படுவதில்லை.

நிலம்:

கல் என்பது நிலத்தைச் சார்ந்தது. இது நிலத்துடன் தொடர்புடையபடியாலேயே, இதில் செடி, கொடிகள் வளர்வதையும் அறியலாம்.

நீர்:
கல்லில் நீர் உள்ளது. அதனால்தான் நீருக்கு உண்டான குளிர் சக்தி கருங்கல்லிலும் உள்ளது.

நெருப்பு:
பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பின் அம்சமும் கருங்கல்லில் உள்ளது. எனவேதான் கற்களை உரசினால் நெருப்பு உண்டாகிறது.

காற்று:

கல்லில் காற்றின் சக்தியும் உண்டு. இதனால்தான் கல்லில் தேரை உயிர் வாழ்கிறது.

ஆகாயம்:

ஆகாயத்தைப் போலவே, வெளியிலிருக்கும் சப்தத்தை தன்னகத்தே ஒடுக்கி, பின் வெளியிடும் சக்தி கல்லுக்கு உண்டு.

இவ்வைந்து சிறப்பும்சங்களும் கொண்ட கருங்கல்லில் இறைவனின் வடிவத்தை செதுக்கி வழிபடுவது சிறப்புவாய்ந்ததாய் கருதப்படுகிறது.

மேலும், ஆகம விதிகளின்படி, கருங்கல்லினால் கட்டப்பட்ட பழங்காலக் கோவில்களில் வேதம், ஆகமம், சிற்பக்கலை சாஸ்திர முறைகளின்படி, கருங்கல்லினால் ஆன தெய்வச்சிலைகளை ப்ரதிஷ்டை செய்து தினந்தோறும், முறையாக பூஜை செய்து வரும் கோவில்களுக்கு நாம் சென்று தரிசனம் செய்யும் வேளைகளில், நம் உடலிலும் உள்ளத்திலும் ஓர் அற்புத சக்தி ஊடுருவுவதை உணரலாம்.

ஏனெனில், அச்சிலைகளுக்கு, அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனைகள் செய்யும்போது அச்சிலையின் பஞ்சபூதத்தன்மை அதிகரிக்கின்றன. அச்சமயம் அங்கு வழிபாடு நடத்துபவர்களுக்கும் அவ்வதிர்வலைகளின் தாக்கத்தால் நன்மை ஏற்படுவதை உணர்வுப்பூர்வமாக உணரலாம்.

1 Trackbacks & Pingbacks

  1. திருமால் பெருமை – எண்ணும் எழுத்தும்

Leave a Reply

Your email address will not be published.


*