எண்ணங்கள் வண்ணங்கள்
ஆழ்மன ஆற்றல்:
இறைவன் படைத்த அற்புதபடைப்புக்களில் ஒன்றான மனிதரின் ஆற்றலில், ஆழ்மன ஆற்றல் என்பது மிகவும் சக்திவாய்ந்ததாகும்.
ஆழ்மனத்தில் பதிந்த எந்தவொரு பதிவும், காலத்திற்கும் அழிவதில்லை. பத்துவயதிற்குள் இருக்கும் குழந்தைகளுக்கு, அவ்வயதிற்குள், அவர்தம் மனதில் பதியும் எண்ணங்கள் அனைத்தும், அவர்களை ஏதேனும் ஒர் விதத்தில் தொடர்ந்துவரும்.
அவ்வயதிற்குள் அமையும் சூழலும், ஏற்படும் பழக்கமும், கற்றுக்கொள்பவைகளும், தெரிந்துக்கொள்பவைகளுமே என்றென்றிற்கும் இருக்கும், அவர்களது அடிப்படைத் தன்மைகளாய் அமையும்.
வெளியில் பெரும் போராட்டம் நடைபெற்றாலும், ஆழ்மனத்தை அமைதியோடு காத்தவர்களே, பெரும் அறிஞர்களும், ஞானிகளுமாய் ஆனவர்கள்.
எந்தவொரு நற்செயலும், ஆழ்மனத்தூண்டுதல் இல்லாமல் நடைபெறுவதில்லை. அதேபோல, எத்தீச்செயலைச் செய்ய எண்ணினாலும் கூட, நம் ஆழ்மனம், அதனைத் தடுக்க பெரும் முயற்சி எடுத்துப் போராடும். அதனையும் மீறி, அதன் முயற்சியை, தடுத்து நாம் செயல்படும் வேளையில், மனம் மிகவும் பாதிப்பிற்குள்ளாகும்.
ஆழ்மனம், எல்லாவற்றிலும், வெறும் வெளிவனப்பை மட்டும் காண்பதில்லை. அவற்றின் பின்புலத்தையும் ஆராய்ந்து பார்க்கும்.
சக்திவாய்ந்த ஆழ்மன ஆற்றலைப் பயன்படுத்தி, சிறப்பாய் சாதிக்கலாம்.
எண்ணங்கள் தொடரும்…
Leave a Reply