எண்ணங்கள் வண்ணங்கள்
செயலும், பழக்கமும்:
நாம் செய்யும் செயல்களில் சில, நாளடைவில் நமக்கு பிடித்தமானதாகின்றன. அவைகளில் பெரும்பாலனவை அன்றாடப்பழக்கமாகின்றன.
அவ்வாறு, பழகிய, பழக்கப்பட்ட செயல்கள் நல்ல முன்னேற்றத்தை அடைகின்றன. நன்கு பழகிய இடங்களில் நமது நடவடிக்கைகளுக்கும், சற்றே அறிமுகமான இடங்களில் நாம் செய்யும் செயல்களுக்கும் உண்டான வித்யாசம் போல இதுவும் அமையும்.
‘கைவந்த கலை’, என்பதற்கிணங்க நம் பழக்கத்தில் வந்த செயல்களை மேலும் பட்டைத்தீட்டி மெருகேற்றமுடியும். அறிமுக செயல்களே தயக்கமாக அமையும். பழகியசெயல்களில் நம் கைவண்ணமும், தெளிவான எண்ணமும் பளிச்சிடும்.
நற்செயல்களை பழக்கமாக்குவோம், பழக்கத்தினால் நமது தனித்திறமையை அச்செயலில் காட்டி அச்செயலை நம் வசப்படுத்தி வெற்றிகொள்வோம்.
எண்ணங்கள் தொடரும்…
Leave a Reply