எண்ணங்கள் வண்ணங்கள்

எண்ணங்கள் வண்ணங்கள்

மன உற்சாகமும், தளர்ச்சியும்:

மனித வாழ்விற்கு ஓர் உந்து சக்தியாய் இருப்பது, மனதின் உற்சாகமாகும். மனம் சமநிலையில் இருந்தால், எவ்விதமானப் பிரச்சனைக்கும் தீர்வு எளிதில் கிடைக்கும்.

மனதின் உற்சாகம், நம் இயல்பை வெளிக்கொணருவதுடன், நம்மால் இயலுவனவற்றை வெளிப்படுத்துவதுடன், நமது இயலாமை எவை என்பதனையும், தெளிவாக, தாழ்வுமனப்பான்மை ஏற்படாதவாறு நமக்கு உணர்த்துகிறது.

உற்சாகம் குன்றிய மனத்துடன் இருக்கையில், மிகச்சாதாரண இயலாமையும், பெரும் இழப்புபோலத் தோன்றும், நமது இயல்பை மறைத்துவிடும்.

மனதளர்ச்சியால், உடலும், எண்ணங்களும் தளர்ந்து, இயல்பாய் சிறப்பாய் முடியும் செயல்களும், கடினமானதாகத்தோன்றும்.

மகாபாரதப் போரில், அர்ஜுனன், தனது மனம் பேதலிக்கும்போது, தனக்கு மிகவும் பிடித்தமான, தன் வம்சத்தார் நலனில் அக்கரையுள்ள, கிருஷ்ணனிடம், ஆலோசனைக் கேட்டு, பின் தெளிந்தார். இறுதியில் போரில் வெற்றிப் பெற்றார்.

இவ்வாறே மனத்தளர்ச்சியின்போது, எண்ணங்களை உற்சாகத்திற்குத் தயார்படுத்தி, சிறு குழந்தைபோன்ற மனதை, சிறிது நேரம், நமக்கு மிகப்பிடித்தமான (பாடல்கள் கேட்பது, சிறிது உலாவுவது, பிடித்தமானவருடன் பேசுவது போன்ற)செயல்களில் ஈடுபடுத்தி, பின்னர் மனம் சமநிலை அடைந்தவுடன் செயலில் ஈடுபட்டோமேயானால் வெற்றி நிச்சயம்.

எண்ணங்கள் தொடரும்…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*