எண்ணங்கள் வண்ணங்கள்
வெற்றியடைய வழிகள்:
அனைவரின் எண்ணமும் எடுத்த காரியத்தில் வெற்றியடைய வேண்டும் என்பதுதான். யாரும் தோற்கவிரும்புவதில்லை.
வெற்றி என்பது செய்யும் வேலையின் அல்லது எடுத்த செயலில் எதிர்நோக்கிய பலனை அல்லது அடையவேண்டிய இலக்கை மனநிறைவுடன் அடைவது எனலாம்.
வெற்றியடைய சில வழிமுறைகள் உள்ளன. தேர்ந்தெடுக்கும் செயலைப்பற்றிய அறிவு, அதனை செய்யவேண்டிய முறைகளைப்பற்றிய தெளிவு, அனுபவ அறிவு, ஏற்ற இறக்கங்களை சந்திக்கும் துணிவு, பிரச்சனைகளை எதிர்கொள்ள பக்குவம், கடினப்பாதைகளை கடந்துவர தைரியம், வழிமுறைகளை கையாளுதல், அணுகுமுறை, விடாமுயற்சி, பதட்டமின்மை இவையனைத்தையும் சரிவர தெரிந்துகொண்டு செயல்படுத்தினால் எந்தவொரு செயலிலும் வெற்றி நிச்சயம்.
செயலில் இறங்குவது, அதில் வெற்றியடைவது மட்டுமல்லாமல், அவ்வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ளவும் தொடர்ந்த உழைப்பு அவசியம். விடாமுயற்சி வெற்றிக்கு வழிவகுக்கும்.
செயல்களில் மட்டுமல்லாமல், நமது எண்ணங்களை வெற்றிகொள்வதும், மற்றவர்களின் உள்ளங்களை வெற்றிகொள்வதும் வாழ்க்கைக்கு மிக தேவையானவைகளாகும்.
நற்பழக்கங்கள், நேர்மறை சிந்தனைகள், நல்ல புத்தகங்களை படித்தறிவது, நற்செயல்களில் நம்மை ஈடுபடுத்திக்கொள்வது, நேரத்தை சீரியமுறையில் வகுத்து செயல்படுவது என்ற இவற்றின்மூலம் நாம் நம் எண்ணங்களையும் மற்றவர்களின் உள்ளங்களையும் ஒருசேர வெற்றிகொள்ளலாம். இதற்கு மன ஒருங்கிணைப்பும், பயிற்சியும் தேவை. நம்மை நாம் வெற்றிகொண்டால் மற்ற வெற்றிகள் எளிதில் சாத்தியமாகும்.
எண்ணங்கள் தொடரும்…
Leave a Reply