எண்களின் சிறப்பு

எண்களின் சிறப்பு

 

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு – குறள்-392

எண், எழுத்து ஆகிய இருவகைக் கலைகளும், வாழும் மக்களுக்கு கண்கள் என்று கூறுவர்.
-திரு.மு.வரதராசன்

தமிழை வாழ்வோடு ஒன்றாக கலந்ததாகக்கொண்டு, அதன் எழுத்துக்களை, உயிர் எழுத்துக்கள் மெய் எழுத்துக்கள் என வகைப்படுத்தினர்.
உயிர் எழுத்துக்கள் :12
மெய் எழுத்துக்கள்:18

உயிர் இல்லாத உடலிலும், உடல் இல்லாத உயிரிலும் எந்த பொருளும்(அர்த்தம்) இல்லை. அதைப்போல இவ்வுயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் சேரும் விதத்தில் சேர்ந்து வந்தால்தான் பொருள் அமையும்.

எழுத்திற்குத் தேவையான ஒலி அமைப்பு, எண்ணின் மூலமே கணக்கிடப்படுகிறது.  அவை ¼ மாத்திரை, ½ மாத்திரை, 1 மாத்திரை, 2 மாத்திரை, 3 மாத்திரை மற்றும் 4 மாத்திரை என்கிறபடி அமைக்கப்பட்டுள்ளது. இவையும் மனித உடலுக்கு துணைபுரியும் மாத்திரையைப்போல அமைந்திருப்பது மற்றொரு சிறப்பு.

சித்திரத்தேர்கவி

திரு எழு கூற்றிருக்கை என்பது தமிழ் கவிதையில் பிரபந்த வகையில் ஒன்று. இவற்றில் அஷ்ட நாக பந்தம், ரத பந்தம்,முரச பந்தம், பதும பந்தம் என்று பல வகை உண்டு. ரத பந்தம் என்றால் கவிதை ஒரு ரத (தேர்) அமைப்பில் இருக்க வேண்டும்.மேலே குறுகியும் படிப்படியாக விரிந்தும் கீழே குறுகியும் இருப்பது ரதத்தின் தன்மை. கவிதையும் அதே போன்று இருக்க வேண்டும்.
திருவெழுகூற்றிருக்கை என்ற பாடல் தேர்த் தட்டு போல் அமைந்துள்ளது. 1 முதல் 7 வரை படிப்படியாக கீழிருந்து மேல் பின்பு மேலிருந்து கீழ் என்று தேர் தட்டு மேலும் கீழேயும் செல்வதுமாக அமைந்த அற்புதமான பாட்டு.

tamil ther

பாடலின் வரிகளில் 1,2,3,4,5,6,7 எண்களைக் குறிக்கும் சொற்களை மேலே குறிப்பிட்டுள்ள வரிசைப்படி எழுதி மொத்தத்தில் அது ஒரு கருத்தைக் குறிக்கும் என்றால் அது தான் எழு கூற்றிருக்கை என்பதாகும்.
அருணகிரிநாதர் இத்தகைய பாடல்களைப் பாடியுள்ளார்.

2 Comments on எண்களின் சிறப்பு

    • மிக்க நன்றி ஐயா. தொடர்ந்து கருத்துக்களைப் பகிரவும்.

      நன்றி

Leave a Reply

Your email address will not be published.


*