எண்ணங்கள் வண்ணங்கள்
லட்சியமும், அறிவும்:
குறிக்கோளில்லாதவர் துடுப்பில்லாத படகைபோல அலைப்பாயவேண்டியிருக்கும். வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் என்னென்னவற்றை செய்யவேண்டும் என்ற எண்ணமும், அடைய வேண்டிய இலக்குபற்றிய சிந்தனையும் அவசியம்.
திட்டமிட்ட இலக்கை எட்டியவுடன் ஏற்படும் மனமகிழ்ச்சி மிகவும் இனிமையானது.
குறிக்கோளை ஏற்படுத்திக்கொள்ள, அதை அடைய, அதனைப்பற்றியும் அதனைச்சார்ந்த செய்திகளையும் அறிந்திருத்தல் மிக அவசியம். எதனை அடைய உள்ளுகிறோமோ அதனைப்பற்றிய சுய அறிவும், நமது அனுபவ அறிவு, பிறரது அனுபவப்பகிர்வு மற்றும் பிறகாரணிகளால் கிடைக்கும் அறிவைக்கொண்டு சிறந்த முறையில் செயலாற்றினால், எளிதில் இலக்கை அடையலாம்.
மேலும் நம்மைப்பற்றி நாமே அறிந்துகொள்ளும், சுய அறிதல் இருந்தால், குறிக்கோளை அமைத்துக்கொள்வதும், அதை நோக்கிப் பயணிப்பதும் மிகச்சுலபம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நேர்மறையான, தன்னம்பிக்கையுடன் கூடிய மகிழ்ச்சியான மனப்பான்மையை எவ்வாறு உருவாக்கிக்கொள்வது என்பது, நமது சுய அறிதல், அறிவு, மற்றும் உயர்ந்த குறிக்கோள் என இவற்றைக்கொண்டு அமையும். ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’.
எண்ணங்கள் தொடரும்…
உண்மை. எந்த ஒரு சந்தர்பத்திலும் நேர்மையான, நேர்மறையான, மகிழ்ச்சியான மற்றும் தன்னம்பிக்கை தரும் எண்ணங்கள் ஏற்பட்டால் வாழ்வின் வண்ணம் நல்ல வண்ணம் மாறும்.
மிக்க நன்றி. தொடர்ந்து கருத்துகளைப் பகிரவும். ஆதரவிற்கு நன்றி.