ஜாங்கிரி
தேவையான பொருட்கள்
உளுத்தம் பருப்பு – 150 கிராம்
அரிசி மாவு – 50 கிராம்
மக்காசோள மாவு (corn flour) – 150 கிராம்
சர்க்கரை – 3/4 கிலோ
லெமென் கலர் பவுடர் – ஒரு சிட்டிகை
ஆரஞ்சு கலர் பவுடர் – ஒரு சிட்டிகை
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
ஒரு வாணலியில் சர்க்கரையுடன் சிறிதளவு நீர் சேர்த்து பாகுபதம் வரும்வரைக் கிளறி, லெமென் கலர் பவுடரை சேர்த்து இறக்கிவைக்கவும்.
உளுத்தம்பருப்பை நன்கு ஊறவைத்து மைய அரைத்து எடுத்துவைக்கவும். இதனுடன் அரிசிமாவு, மக்காசோள மாவு ஆரஞ்சு கலர் பவுடர் ஒரு சிட்டிகை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். ஜாங்கிரிக்கான மாவு தயார்.
மற்றொரு வாணலியில் எண்ணெயை ஊற்றிக் காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை, ஜாங்கிரி பிழிய பயன்படும் துணியில் எடுத்துக்கொண்டு எண்ணெயில் சிறியதாக சுற்றவும். நன்றாக சிவக்க வெந்ததும் இதை எடுத்து சர்க்கரைப்பாகில் போட்டு சிறிது நேரம் ஊறியவுடன் எடுத்து சுவைக்கலாம்.
Leave a Reply