கருவேப்பிலைப்பொடி சாதம்
தேவையான பொருட்கள்
கருவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு
காய்ந்த மிளகாய் – 10
கடுகு – ஒரு ஸ்பூன் அளவு
உளுத்தம் பருப்பு – இரண்டு ஸ்பூன் அளவு
கடலைப்பருப்பு – இரண்டு ஸ்பூன் அளவு
சீரகம் – இரண்டு ஸ்பூன் அளவு
அரிசி – ஒரு டம்ளர் அளவு
வேர்கடலை – இரண்டு ஸ்பூன் அளவு
செய்முறை
கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் -6, உளுத்தம் பருப்பு இரண்டு ஸ்பூன் அளவு, கடலைப்பருப்பு இரண்டு ஸ்பூன் அளவு ஆகியவற்றை வெறும் வாணலியில் வதக்கி பொடிசெய்து வைத்துக்கொள்ளவும்.
அரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து ஒருபங்கு அரிசிக்கு இரண்டு பங்கு நீர் விட்டு, குக்கரில் மூன்று விசில்(பிரஷ்ர் சவுண்டு) வரும்வரை வேகவைத்து, சாதத்தை சிறிது ஆறவைக்கவும்.
ஒரு வாணலியில் நல்லெண்ணெய் இரண்டு ஸ்பூன் அளவு விட்டு காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன் அளவு, கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன் அளவு, சீரகம் இரண்டு ஸ்பூன் அளவு, காய்ந்த மிளகாய் 4, வேர்க்கடலை இரண்டு ஸ்பூன் அளவு ஆகியவற்றை சேர்த்து வதக்கி, ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, இவற்றுடன் ஆறவைத்த சாதத்தையும் சேர்த்து தேவையான அளவு சால்ட் (பொடி உப்பு) சேர்த்து கிளறி, அடுப்புத் தணலை சிறிதாக்கி வாணலியை மூடிவைக்கவும். இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விட்டு ஒருமுறை சாதத்தைக்கிளறிவிடவும். சுவையான கருவேப்பிலை சாதம் தயார்.
Leave a Reply