ஆத்திசூடி
51. சேரிடம் அறிந்து சேர் – சேரத் தகுந்தவர்களை ஆராய்ந்து அறிந்து அவர்களோடு சேர்வாயாக.
52. சையெனத் திரியேல் – பிறர் சை(சீ) என்று இழிவாகச் சொல்லும்படி, நடந்துக் கொள்ளக்கூடாது.
53. சொற்சோர்வு படேல் – பிறரைத் தளர்ச்சியடையச் செய்யும் வார்த்தைகளைப் பேசாதே.
54. சோம்பித் திரியேல் – செய்யவேண்டிய வேலைகளைச் செய்யாமல் சோம்பேறியாய் நடந்து கொள்ளக்கூடாது.
55. தக்கோன் எனத்திரி – தகுதி உடையவர் என்று பிறர் கூறும்படி நமதுத் தகுதிகளை வளர்த்துக்கொண்டு தக்கசமயத்தில் வெளிப்படுத்தவேண்டும்.
Leave a Reply