வாழ்க்கையில் அனைவரும் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் ஒரே மாதிரியாக பெற்றுள்ளோம். அதுவே காலம்.
அனைவருக்கும் 24 மணி நேரம் என்பது பொதுவானதாக உள்ளது.
இந்த காலத்திற்குள் நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதனைப் பொறுத்தே நம் வாழ்வு அமைகிறது.
இந்த கால அளவிற்குள் நமது சக்தியை & புத்தியை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைக் கொண்டே நம் வாழ்வின் நிலை அமையும். நம் அனைவரிடமும் இருக்கும் சில பல ஏற்றத்தாழ்வுகள் இவற்றைக்கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது.
கால எல்லையைக்கொண்டே பூமியில் அனைத்தும் நடக்கிறது.
அத்தகைய காலத்திற்குள்ளான நமது எண்ணங்களும் செயல்பாடுகளுமே நம் வாழ்வின் அமைதியை, நிம்மதியான வாழ்வை தரும் காரணியாக உள்ளது. சிந்தித்து செயலாற்ற வேண்டும்.
Leave a Reply