यदि ह्यहं न वर्तेयंजातु कर्मण्यतन्द्रित:।
मम वर्त्मानुवर्तन्ते मनुष्या: पार्लर सर्वश:।।
३:२३
उत्सीदेयुरिमे रोका न कुर्यां कर्म चेदहम्।
सङ्करस्य च करता स्यामुपहन्यामिमा: प्रजा:।।
३:२४
“நான் எப்பொழுதும் அயர்வின்றிச் செயல்களைச் செய்யாமல் போனால், நிச்சயமாக மனிதர்களும் என்னுடைய வழியையே எல்லாவிதத்திலும் பின்பற்றுவர்”
“நான் செயல்களைச் செய்யாமல் விட்டால் இவ்வுலகங்கள் அழிந்துபோகும். மேலும், கலக்கத்திற்கும், குழப்பத்திற்கும் ஜனங்களின் அழிவிற்கும் நானே காரணம் ஆகிவிடுவேன்.”
“எனவே நான் எனது கடமை தவறாது செயல்புரியவேண்டும்”
என கண்ணன் கீதையில் கூறியுள்ளார்.
பிட்டுக்கு மண் சுமக்கச் சென்ற ஈசனும், தேரோட்டியான கண்ணனும் பிறருக்காக உழைத்தவர்கள்தான்.
சொற்களில் தலைசிறந்த ஒரு சொல் செயல்.
திட்டம் மட்டும் போதாது, செயலாற்றவேண்டும். வழிமுறை மட்டும் போதாது, செயல்முறை வேண்டும்.
நேர்மையோடு கண்ணியமான முறையில் முழு ஈடுபாட்டுடன் உழைப்போம், மனநிறைவடைவோம்.
உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள். இன்றும் என்றென்றும்
Leave a Reply