ஐந்து வகை நமஸ்காரங்கள்

நமஸ்காரம் செய்வது / வணங்குவது எனும் முறையில் ஐந்து விதங்கள் உள்ளன.

1. தலையை மட்டும் குனிந்து வணங்குதல் ‘ஏகாங்க நமஸ்காரம்’ எனப்படும். அதாவது ஒரு அங்கத்தினால் வணங்குவது.

2. தலைக்குமேல் இருகைகளையும் கூப்பி வணங்குவது, ‘திரியங்க நமஸ்காரம்’ என்பர். மூன்று அங்கங்களால் நமஸ்காரம் செய்வது.

3. இருகைகள், இருமுழங்கால்கள், தலை ஆகிய ஐந்தும் நிலத்தில்பட வணங்குவது ‘பஞ்ச அங்க நமஸ்காரம்’ எனப்படும். அதாவது ஐந்து அங்கங்களால் நமஸ்கரிப்பது.

4. இருகைகள், மார்பு, இரு முழங்கால்கள், தலை ஆகியவை பூமியில்பட வணங்குதல் ‘சாஷ்டாங்க நமஸ்காரம்’ எனப்படும். அதாவது ஆறு அங்கங்களால் வணங்குவது.

5. தலை, இருகைகள், இரு செவிகள், இரு முழங்கால்கள், மார்பு ஆகிய அங்கங்கள் பூமியில் படும்படி வணங்குவது ‘அஷ்டாங்க நமஸ்காரம்’ எனப்படும்.
எட்டு அங்கங்களினால் நமஸ்காரம் செய்வது.

இவ்வாறு இறைவனை, வயதில் மூத்தோரை, வணக்கத்திற்குரியவர்களை வணங்குவதில் ஐந்து வகைகள் உள்ளன.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*