ஒரு வரியில் சில தெய்வங்கள்

 

ஒரு வரியில் சில தெய்வங்கள்:-

” சிரமாறு உடையான் “

1. சிரம் மாறு உடையான் – தலையது மாறி
வேழத்தின் சிரம் அமைந்த விநாயகனைக்குறிக்கும்

2 . சிரம் ஆறு(6)உடையான் – ஆறு முகம்
படைத்த சுப்பிரமணியத்தைக்குறிக்கும்

3 . சிரம் ஆறு உடையான் – சிரத்தில் கங்கையை கொண்ட சிவனைக்குறிக்கும்

4 . சிரம் மாறு உடையான் – சிரமது முன்னும் பின்னும் உள்ள நான் முகனாம் பிரம்மாவைக்குறிக்கும்

5. சிரம் ஆறு(river) உடையான் – காவிரி ஆற்றில் தலை வைத்து சயனித்திருக்கும் ஸ்ரீ ரங்கநாதரைக்குறிக்கும்.

 

(- செய்கு தம்பி பாவலர்)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*