பஜகோவிந்தம் -13
காலத்தின் விளையாட்டு:
தினயாமின்யௌ ஸாயம் ப்ராத:
சிசிரவஸந்தெள புநராயாந: |
கால: க்ரீடதி கச்சத்யாயு:
ததபி ந முஞ்சத்யாசாவாயு: ||
பதவுரை:
தினயாமின்யௌ – பகலும் இரவும்
ஸாயம் – மாலை
ப்ராத: – காலை
சிசிரவஸந்தெள – சிசிரருதுவும் வஸந்தருதுவும்
கால: – காலம்
க்ரீடதி – விளையாடுகிறது
கச்சதி – போகிறது
ஆயு: – ஆயுள்
ததபி – அப்படியிருந்தும்
ந முஞ்சதி – விடுவதில்லை
ஆசாவாயு: – ஆசையாகிய காற்று
கருத்து:
காலம் விளையாடுகிறது. அது பகலாகவும், இரவாகவும், மாலையாகவும், காலையாகவும், குளிர்காலமாகவும், வசந்தகாலமாகவும் மாறி மாறி காட்சியளிக்கிறது. இப்படிக்காலம் மாறி மாறி வருவதுபோல் மனிதரின் வாழ்வும் மாற்றமடைந்து ஓர்நாள் முடிவடைகிறது. இப்படியிருப்பது தெரிந்தும் ஆசைமட்டும் நீங்குவதில்லை. எதிலும் திருப்தியில்லை. ஆசையை அடக்க பலரால் முடிவதில்லை. உயிர்காற்று நீங்கினாலும் ஆசையாகிய காற்று நீங்குவதில்லை என்கிறார் ஆதிசங்கரர்.
Leave a Reply