பஜகோவிந்தம் – 30
மனதைக் கட்டுப்படுத்தவேண்டும்:
ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம்
நித்யாநித்ய விவேக விசாரம் |
ஜாப்ய ஸமேத ஸமாதி விதாநம்
குர்வவதாநம் மஹதவதாநம் ||
பதவுரை:
ப்ராணாயாமம் – மூச்சுப்பயிற்சி
ப்ரத்யாஹாரம் – புலனடக்கம்
நித்ய அநித்ய – நிலையானது, நிலையற்றது
விவேக விசாரம் – புத்தியைக்கொண்டு யோசித்தல்
ஜாப்ய ஸமேத ஸமாதி விதாநம் – மந்த்ரஜபத்துடன் கூடிய சமாதியை அநுஷ்டித்தல்
குரு – செய்வாய்
அவதாநம் – மன ஒருநிலைப்பாடு
மஹத் – பெரிதான
அவதாநம் – மன ஒருநிலைப்பாடு
கருத்து:
பிராணாயாமம் எனும் மூச்சுப்பயிற்சியும், ப்ரத்யாஹாரம் எனும் புலன்களை அடக்கத்தையும், நிலையானது எது, நிலையற்றது எது என்ற பாகுபாட்டை யோசித்தலையும், ஜபத்தையும், சமாதி எனும் தியானநிலையையும், மனத்தின் ஒருநிலைப்பாட்டையும் முழுகவனத்துடன் செய்யவேண்டும். இவ்வாறு செய்வதனால் நம்மைப்பற்றி நாம் நன்கு அறிந்துகொள்ளமுடியும். மேலும் நற்செயல்களில் நம்மையும் ஈடுபடுத்திக்கொண்டு, பிறரையும் வழிநடத்தமுடியும். இதனால் அனைவரும் மேன்மையை அடையலாம் என்று இவ்வுலக மேலுலக வாழ்வு சிறக்க வழிகாட்டுகிறார் ஆதிசங்கரர்.
Leave a Reply