பஜகோவிந்தம் – 29
பாவங்களை செய்யக்கூடாது:
ஸுகத: க்ரியதே ராமாபோக:
பச்சாத் ஹந்த சரீரே ரோக: |
யத்யபி லோகே மரணம் சரணம்
ததபி ந முஞ்சதி பாபாசரணம் ||
பதவுரை:
ஸுகத: – சுகமாக
க்ரியதே – செய்யப்படுகிறது
ராமாபோக: – பெண்ணின்ப அநுபவம்
பச்சாத் – பிறகு
ஹந்த – ஐயோ!
சரீரே – உடலில்
ரோக: – நோய்
யத்யபி – எப்படியாயினும்
லோகே – உலகில்
மரணம் – இறப்பு
சரணம் – முடிவானது
ததபி – அப்படியிருந்தாலும்
ந முஞ்சதி – விடுவதில்லை
பாபாசரணம் – பாவத்தைச் செய்தலை
கருத்து:
இன்பத்தைத் தருகிறது எனக்கருதி பெண்ணோடு-பெண்களோடு கூடாத சேர்க்கையில் சிலர் ஈடுபடுகின்றனர். அதன்காரணமாக நோய்வாய்ப்படுகின்றனர். முடிவாக பல சிரமங்களை அடைந்து மரணமடைகின்றனர். மரணம் என்பது தவிர்க்க முடியாததாயினும், பல அனர்த்த செயல்களினால் ஏற்படும் துன்பங்கள், பாவங்கள் இவற்றைத் தவிர்த்து நிம்மதியான முடிவை ஏய்தலாம். அதற்கு பாவச்செயல்களில் ஈடுபடக்கூடாது என்று வலியுறுத்துகிறார் ஆதிசங்கரர்.
Leave a Reply