பஜகோவிந்தம் – 28

பஜகோவிந்தம் – 28

அனைவரின் கடமை:

கேயம் கீதா நாம ஸஹஸ்ரம்

த்யேயம் ஸ்ரீபதி ரூபம் அஜஸ்ரம்  |

நேயம் ஸஜ்ஜந ஸங்கே சித்தம்

தேயம் தீநஜநாய ச வித்தம்  ||

 

பதவுரை:

கேயம்                                – பாடப்படவேண்டும்

கீதா நாமஸஹஸ்ரம்   – கீதையும் (விஷ்ணு) ஸஹஸ்ரநாமமும்

த்யேயம்                             – தியானம் செய்யப்படவேண்டும்

ஸ்ரீபதி ரூபம்                      – ஸ்ரீமன்நாராயணனுடைய உருவம்

அஜஸ்ரம்                            – எப்பொழுதும்

நேயம்                                  – அடைவிக்கப்படவேண்டும்

ஸத்ஜந ஸங்கே               – நல்லோர்களுடைய சேர்க்கையில்

ஸித்தம்                              – மனமானது

தேயம்                                – கொடுக்கப்படவேண்டும்

தீநஜநாய                          – ஏழை மக்களுக்கு

ச                                           – கூட

வித்தம்                               – பணமானது

 

கருத்து:

 

நல்ல கதியை அடைய விரும்புபவர்கள், தினமும் பகவத் கீதையையும், விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தையும் பாராயணம் செய்யவேண்டும். எப்பொழுதும் பகவானுடைய உருவத்தை தியானம் செய்துகொண்டிருக்கவேண்டும். நல்லவர்களுடைய சேர்க்கையில் மனத்தைச் செலுத்தவேண்டும். ஏழை மக்களுக்கும் நம்மால் இயன்ற அளவு பொருட்களைக் கொடுத்து உதவவேண்டும். இச்செயல்களை ஒவ்வொருவரும் தமது நித்யக் கடமையாகக் கொண்டு செயலாற்றவேண்டும் என்பது ஆதிசங்கரரின் விருப்பம்.

 

 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*