பஜகோவிந்தம் – 25

பஜகோவிந்தம் – 25

எல்லாம் விஷ்ணுமயம்:

த்வயி மயி சான்யத்ரைகோ விஷ்ணு:
வ்யர்த்தம் குப்யஸி மய்யஸஹிஷ்ணு: |
ஸர்வஸ்மிந்நபி பச்யாத்மாநம்
ஸர்வத்ரோத்ஸ்ருஜ பேதஜ்ஞாநம் ||

பதவுரை:

த்வயி – உன்னிடமும்
மயி – என்னிடமும்
அந்யத்ர ச – வேறு இடங்களிலும்
ஏக: – ஒரே
விஷ்ணு: – விஷ்ணுதான் (நிறைந்து இருக்கிறார்)
வ்யர்த்தம் – வீணாக
குப்யஸி – கோபப்படுகிறாய்
மயி – என்னிடம்
அஸஹிஷ்ணு: – பொறாமை கொண்டு
ஸர்வஸ்மிந் அபி – எல்லாவற்றிலும்
பச்ய – பார்
ஆத்மாநம் – தன்னையே
ஸர்வத்ர – எல்லாவிடத்திலும்
உத்ஸ்ருஜ – விட்டுவிடு
பேதஜ்ஞாநம் – பிரித்துப்பார்க்கும் எண்ணத்தை

கருத்து:

உன்னிடத்தும் என்னிடத்தும் மற்றெல்லாவிடத்தும் ஸ்ரீமஹாவிஷ்ணுவாகிய பரமாத்மா பரவியுள்ளார். நீ வீணாக என்னிடம் பொறாமை கொண்டு ஏன் என்னைப்பார்த்துக் கோபப்படுகிறாய்? நீ ‘அஹம் ப்ரஹ்மாஸ்மி’ என்றபடி எல்லாவிடத்திலும் உன்னையே பார். அப்பொழுது ‘நீ’, ’நான்’ என்பது போன்ற பேதஞானம் அகன்றுவிடும். அனைத்தும் விஷ்ணுமயமானது-சர்வம் விஷ்ணுமயம் ஜகத் என்பது தெளிவாகும் என்கிறார் ஆதிசங்கரர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*