பஜகோவிந்தம் – 24
தன்னைப்பற்றிய தெளிவு:
கஸ்த்வம் கோऽஹம் குத ஆயாத:
கா மே ஜனனீ கோ மே தாத: |
இதி பரிபாவய ஸர்வமஸாரம்
விஸ்வம் த்யக்த்வா ஸ்வப்ந விசாரம் ||
பதவுரை:
க: – யார்?
த்வம் – நீ
அஹம் – நான்
க: – யார்?
குத: – எங்கிருந்து
ஆயாத: – வந்தேன்
கா – எவள்
மே – என்னுடைய
ஜனனீ – தாய்
கோ – எவர்
மே – என்னுடைய
தாத: – தந்தை
இதி – என்று
பரிபாவய – எண்ணுவாயாக
ஸர்வம் – அனைத்தையும்
அஸாரம் – ஸாரமில்லாததாக
விஸ்வம் – உலகை
த்யக்த்வா – ஒதுக்கிவிட்டு
ஸ்வப்ந விசாரம் – கனவுப்பேச்சாக
கருத்து:
நீ யார்? நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன்? என் தாய் யார்? தந்தை யார்? இதெல்லாம் கனவுக்காட்சி போன்று மாயை அல்லவா? என்று உன் மனதில் பாவனை செய்து, இந்த உலகமானது ஸாரமற்றது என்பதை உணர்ந்து, முக்திக்கான முயற்சிப்பற்றி தெளிவுபெறவேண்டும் என்கிறார் ஆதிசங்கரர்.
Leave a Reply