பஜகோவிந்தம் – 22
இறத்தல் பிறத்தல் அற்ற முக்தி நிலை:
புநரபி ஜனனம் புநரபி மரணம்
புநரபி ஜனனீ ஜடரே சயனம் |
இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே
க்ருபயாऽபாரே பாஹி முராரே ||
பதவுரை:
புநரபி – மறுபடியும்
ஜனனம் – பிறப்பு
புநரபி – மறுபடியும்
மரணம் – இறப்பு
புநரபி – மறுபடியும்
ஜனனீ ஜடரே – தாயின் வயிற்றில்
சயனம் – படுக்கை (தங்குதல்)
இஹ் – இந்த
ஸம்ஸாரே – உலக வாழ்க்கையில்
பஹு – மிகவும்
துஸ்தாரே – கடக்க முடியாததும்
க்ருபயா – தயையினாலே
அபாரே – கடையில்லாததுமான
பாஹி – காப்பாற்று
முராரே – பகவானே!
கருத்து:
பகவானே! இந்த ஸம்ஸாரமாகிய சமுத்திரம் கடக்க முடியாதது. இதற்குக் கரையும் இல்லை. இதில் மறுபடியும் மறுபடியும் பிறக்கவேண்டும். இறக்கவேண்டும். மறுபடியும் தாய் வயிற்றில் தங்கிப் பிறக்கவேண்டும். இப்படி முடிவில்லாத பிறத்தல் இறத்தலாகிய சிக்கலான சூழலிலிருந்து இறைவா! கருணையுடன் நீதான் கரைசேர்க்கவேண்டும். பிறத்தல் இறத்தல் என்பவை இல்லாமல் முக்தி நிலையை அளிக்கவேண்டும் என்று அனைவருக்காகவும் ஆதிசங்கரர் இறைவனைப் பிரார்த்திக்கிறார்.
Leave a Reply