பஜகோவிந்தம் – 19
வைராக்கியம் அவசியம்:
ஸுரமந்திர தருமூல நிவாஸ:
சய்யா பூதலம் அஜினம் வாஸ: |
ஸர்வ பரிக்ரஹ போக த்யாக:
கஸ்ய ஸுகம் ந கரோதி விராக: ||
பதவுரை:
ஸுரமந்திர தருமூல நிவாஸ: – கோயிலிலும்
மரத்தடியிலும் வாசம்
சய்யா – படுக்கை
பூதலம் – தரை
அஜினம் – அஜினம்
வாஸ: – ஆடை
ஸர்வ பரிக்ரஹ போக த்யாக: – எல்லா உடமைப்
பொருட்களையும்
அனுபவிக்காமல்
துறப்பது என்கிற
கஸ்ய – எவனுக்குத்தான்
ஸுகம் – சுகத்தை
ந கரோதி – செய்வதில்லை
விராக: – வைராக்கியம்
கருத்து:
கோயிலிலோ, மரத்தடியிலோ வாசம்; தரைமீது படுத்தல்; தனது தோலே உடை; எல்லா இன்பங்களையும் எல்லாப் பற்றுக்களையும் துறந்துவிடும் வைராக்கியம் எவனுக்குத்தான் சுகமளிக்காது? (பரம சுகமளிக்கும்) என நல்வழிப்படுத்துகிறார் ஆதிசங்கரர்.
Leave a Reply