பஜகோவிந்தம் – 18
ஞானமில்லையேல் மோக்ஷமில்லை:
குருதே கங்கா ஸாகர கமநம்
வ்ரத பரிபாலநம் அதவா தானம்|
ஜ்ஞாந விஹீந: ஸர்வ மதேந
முக்திம் ந பஜதி ஜந்ம சதேந||
பதவுரை:
குருதே – செய்கிறான்
கங்கா ஸாகர கமநம் – கங்கைக்கும், கடலுக்கும்
(ஸ்நானம்) செய்வதற்காக)
செல்வதையாவது
வ்ரத பரிபாலநம் – விரதம் ஏற்பதையாவது
அதவா – அல்லது
தானம் – தானத்தையாவது
ஜ்ஞாந விஹீந: – ஞானமில்லாதவன்
ஸர்வ மதேந – எல்லா மத ரீதியாகவும்
முக்திம் – மோக்ஷத்தை
ந பஜதி – அடைவதில்லை
ஜன்ம சதேந – நூறு பிறவிகளானாலும்
கருத்து:
கங்கைக்கும் கடலுக்கும் சென்று நீராடினாலும், விரதங்கள் பலவற்றை ஏற்றுச் செய்தாலும், தானங்கள் பல புரிந்தாலும் மோக்ஷம் கிடைக்காது. ஞானம் ஒன்றினால்தான் மோக்ஷம் கிட்டும். ஞானம் ஏற்படாமல் நூறு பிறவி எடுத்தாலும் முக்தியடைய இயலாது என்கிறார் ஆதிசங்கரர்.
Leave a Reply