பஜகோவிந்தம் – 17
அனுபவத்தாலும் ஆசை அகல்வதில்லை:
அக்ரே வஹ்நி: ப்ருஷ்டே பாநு:
ராத்ரௌ சுபுக ஸமர்ப்பித ஜாநு: |
கரதல பிக்ஷஸ் தருதல வாஸ:
ததபி ந முஞ்ச த்யாசா பாச: ||
பதவுரை:
அக்ரே எதிரில்
வஹ்நி: நெருப்பு
ப்ருஷ்டே பின்புறத்தில்
பாநு: சூரியன்
ராத்ரௌ இரவில்
சுபுக ஸமர்ப்பித ஜாநு: குளிருக்கு இதமாக முழங்காலில் முகத்தை புதைத்து வைத்திருக்கிறான்
கரதல பிக்ஷ: கையில் பிட்சை ஏந்துகிறான்
தருதல வாஸ: மரத்தடியில் வசிக்கிறான்
ததபி அப்படியிருந்தும்
ந முஞ்சதி விடுவதில்லை
ஆசாபாச: ஆசை எனும் பாசக்கயிறு
கருத்து:
ஒருவன் தவம் செய்கிறான். பகலில் அவன் எதிரில் அக்னி முதுகுப்புறத்தில் சூரிய வெப்பம். இரவில் குளிர் தாங்காமல் தன் முகத்தை முழங்காலில் புதைத்துக்கொள்கிறான். பிட்சை வாங்கப்பாத்திரம் இல்லாததால் தனது கைகளிலேயே உணவுப்பண்டங்களைப் பெற்றுக்கொள்கிறான். தங்குவதற்கு நல்ல இடமும் இன்றி மரத்தடியிலேயே உறங்குகிறான். இவ்வாறு வாழ்வு நடத்துபவனையும் ஆசை விடுவதில்லை.
எத்தகையோரையும் ஆசை எனும் பாசக்கயிறு கட்டியிழுத்து பாடுபடுத்துகிறது என்கிறார் ஆதிசங்கரர்.
Leave a Reply